அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவானின் பக்தன் அல்லது ஒரு வைணவன் பகவானுக்கு அளிக்காமல் எதையுமே தொடுவதில்லை. ஒரு வைணவன் தனது செயல்கள் அனைத்தின் பலன்களையும் பகவானுக்கே அர்ப்பணித்திருப்பதினால் அவன் பகவானுக்கு முதலில் படைக்கப்படாத எந்தவொரு உணவையும் சுவைப்பதில்லை. பகவானும் கூடத் தனக்கு அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களை வைணவனின் வாய்க்கு அளித்து சுவைத்து மகிழ்கிறார். இச்சுலோகத்திலிருந்து பகவான் வேள்விக் குண்டத்தின் தீயின் மூலமும் அந்தணனின் வாயின் மூலமும் உண்கிறார் என்று தெளிவாகிறது. பல்வேறு விதமானப் பொருட்கள் தானியங்கள், நெய் போன்றவை பகவானின் திருப்திக்காக வேள்வித் தீயில் அர்ப்பணிக்ப்படுகின்றன. பகவான் வேள்வியின் நிவேதனங்களை அந்தணர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்கிறார். சில இடங்களில் குறிப்பிடப்ட்டிருப்பது போல் அந்தணர்க்கும் வைணவர்க்கும் உண்பதற்காக வழங்கப்படும் எதையும் பகவானும் கூட ஏற்றுக் கொள்கிறார். இங்கே அவர் அந்தணர் மற்றும் வைணவர்களின் வாய்களுக்கு அர்ப்பணிக்கப்படுபவற்றையே மிகுந்த சுவையுடன் ஏற்றுக் கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்...