Skip to main content

Posts

Showing posts from September 5, 2021

ஏகலைவனின் குரு பக்தி

ஏகலைவனின் குரு பக்தி வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஏகலைவன்–மஹாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரங் களுக்கு இடையில் மிகச் சிறியவன்; ஆயினும் பிரபலமானவன். தனது மானசீக குருவான துரோணரின் விருப்பத்திற்கு இணங்கி தனது வலதுகை கட்டை விரலை தட்சணையாகக் கொடுத்தவன். குருவிற்காக கட்டை விரலையே வழங்கிய ஏகலைவனைப் பலரும் பாராட்டி குரு பக்தியின் உதாரணமாகக் காட்டுகின்றனர். ஏகலைவனின் குரு பக்தியை இங்கு சற்று விரிவாகக் காணலாம்.   அர்ஜுனனை மிகச்சிறந்த சீடனாக துரோணர் அறிவித்தல் ஏகலைவனின் வரலாற்றை மஹாபாரதம் அறிந்தோர் அனைவரும் அறிவர். இருப்பினும், ஏகலைவனின் குரு பக்தியை ஆராய்வதற்கு முன்பாக அவனது வரலாற்றின் சுருக்கத்தை (மஹாபாரதத்தில் உள்ளபடி) அறிதல் நன்று. பாண்டவர்கள், கௌரவர்கள் என பலரும் துரோணரிடம் போர்க்கலை கற்று வந்தபோதிலும், அர்ஜுனன் தனது குருவின் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பினாலும் மரியாதையினாலும் மிகச்சிறந்த சீடனாகத் திகழ்ந்தான். அனைத்து கலைகளையும் நுண்ணியமாகக் கற்றுக் கொண்ட அர்ஜுனன், துரோணருக்கு மிகவும் பிரியமானவனாக மாறினான். அர்ஜுனனுக்கு இருளில் உணவளிக்கக் கூடாது என்று துரோணர் சமையல்காரனுக்கு கட்டளையிட...