க்ரிஷ்ண நாம-மஹா-மந்த்ரேர ஏஇ த' ஸ்வபாவ ஜேஇ ஜபே, தார க்ரிஷ்ணே உபஜயே பாவ மொழிபெயர்ப்பு "'ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிப்பவர் உடனடியாக கிருஷ்ணருக்கான அன்புப் பரவசத்தினை வளர்த்துக்கொள்கிறார். இதுவே அந்த மஹா மந்திரத்தின் சுபாவமாகும். பொருளுரை: ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பவன் பாவ அல்லது பரவசம் எனப்படும் நிலையை வளர்த்துக்கொள்வதாக இந்த ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில்தான் கிருஷ்ணர் தம்மை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். இஃது ஒருவனது உண்மையான கிருஷ்ண பிரேமையை வளர்ப்பதன் ஆரம்பநிலையாகும். பகவான் கிருஷ்ணர் இந்த பாவ நிலையினை பகவத் கீதையில் (10.8) குறிப்பிடுகிறார்: அஹம் ஸர்வஸ்ய ப்ரப வோ மத்த: ஸர்வம்' ப்ரவர்ததே இதி மத்வா பஜந்தே மாம்' புதா பாவ-ஸமன்விதா: "ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்." ஓர் ஆரம்பநிலை சீடன், ஸ்ரவணம், கீர்த்தனம், பக்தர்களின் சங்கம், விதிமுறைகளைப் பயிற்சி செய்தல் என பக்தித் தொண்டினைத் தொடங்குகிறான்; இ...