Skip to main content

Posts

Showing posts from January 30, 2022

ஸ்ரீஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

ஶ்ரீ ஶ்ரீ சிக்ஷாஷ்டகம் (பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் எழுதப்பட்ட எட்டு பாடல்கள்) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண விஞ்ஞானம் குறித்த புத்தகங்களை எழுதும்படி தனது சீடர்களுக்கு உபதேசித்தார். அப்பணியினை அவரது சீடத் தொடரில் வருபவர்கள் இன்று வரை ஏற்று நடத்தி வருகின்றனர். இடைவிடாத சீடப் பரம்பரையின் காரணத்தினால், பகவான் சைதன்யரால் வழங்கப்பட்ட தத்துவங்களின் விளக்கங்களும் வியாக்கியானங்களும் மிகமிக அதிகமாகவும், உண்மையிலிருந்து பிறழாமலும் கட்டுக்கோப்புடையதாகவும் உள்ளன. பகவான் சைதன்யர் அவரது இளமைக் காலத்தில் பண்டிதர் என்று பிரபலமாக அறியப்பட்டிருப்பினும், அவர் சிக்ஷாஷ்டகம் எனப்படும் எட்டு ஸ்லோகங்களை மட்டுமே விட்டுச் சென்றார். இந்த எட்டு ஸ்லோகங்கள் அவரது திருப்பணியையும் கொள்கைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இந்த உயர்மதிப்புடைய பிரார்த்தனைகளை இன்று வழங்குவதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறோம். (1) சேதோ-தர்பண-மார்ஜனம்  பவ-மஹா- தாவாக்னி-நிர்வாபனம் ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வதூ-ஜீவனம் ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம் ஸர்வாத்ம-ஸ்னபனம் பரம் விஜயத...

கருணாமூர்த்தி

பகவத்கீதையில் (9.29) பகவான் கூறுகிறார்: ஸமோ ‘ஹம் ஸர்வ - பூதேஷு ந மே த்வேஷ்யோ ‘ஸ்தி ந ப்ரிய: யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாபி அஹம் “நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ அல்லது பட்சபாதம் காட்டுவதோ இல்லை. அனைவரிடமும் நான் சமமாகவே நடந்து கொள்கிறேன். ஆனால் பக்தியுடன் எனக்குச் சேவை செய்பவன் யாராயினும் அவன் என் நண்பனாவான். அவன் என்னில் இருக்கிறான், நானும் அவனிடம் ஒரு நண்பனாக இருக்கிறேன்.” பரமபுருஷ பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் நிச்சயமாக சமமாகத்தான் இருக்கிறார். ஆனால் பகவானின் தாமரைப் பாதங்களில் முழுமையாக சரணடையும் பக்தரொருவர் பக்தரல்லாதவரிடமிருந்து வேறுபட்டவராவார். அதாவது, பகவானிடமிருந்து சமமான ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ அனைவரும் அவரது திருவடிகளில் புகலிடம் கொள்ளலாம். ஆனால் பக்தரல்லாதவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இதனால் ஜட சக்தியால் உண்டாக்கப்பட்ட விளைவுகளால் அவர்கள் துன்புறுகின்றனர். ஒரு சாதாரண உதாரணத்தால், இவ்வுண்மையை நம்மால் புரிந்துகொள் முடியும். அரசர் அல்லது அரசாங்கம் எல்லாப் பிரஜைகளிடமும் சமமாக இருக்கிறது. ஆகவே, பிரஜை ஒருவர் அரசாங்கத்திடமிருந்து விசேஷ ஆதரவுகளைப் பெறும் தகுதி படைத்தவர...