நரசிம்ம அவதாரம் ஆதாரம் :- ஶ்ரீமத ் பாகவதம் ஏழாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 3 இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இரண்யகசிபு கடுந்தவங்களினால் பிரம்மதேவரை மகிழ்வித்து தான் விரும்பிய வரங்களைப் பெற்றான் . இந்த வரங்களைப் பெற்ற பின் , கிட்டத்தட்ட முழுமையாக அரிக்கப்பட்டிருந்த அவனது உடல் , முழு அழகும் , தங்கத்தைப் போன்ற பளபளப்பும் கொண்ட ஓருடலாக புதுப்பித்துப்பட்டது . ஆயினும் , தன் சகோதரனைக் கொன்ற பகவான் விஷ்ணுவை மறக்கமுடியாமல் தொடர்ந்து அவரிடம் பகைமை பாராட்டி வந்தான் . இரண்யகசிபு பத்துத் திசைகளையும் மூவுலங்களையும் வென்று , தேவர்கள் , அசுரர்கள் ஆகிய அனைத்து ஜீவராசிகளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான் . இந்திரனின் இருப்பிடம் உட்பட எல்லா இடங்களுக்கும் அதிபதியாக மாறிய அவன் , மிகவும் ஆடம்பரமாக வாழ்வை அனுபவிக்கத் துவங்கி வெறிபிடித்தவனானான் . பகவான் விஷ்ணு , பிரம்மதேவர் மற்றும் சிவபெருமா...