Skip to main content

Posts

Showing posts from June 23, 2021

அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை)

  அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை)  பகவான் ஜெகந்நாதரின் அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை) எப்பொழுது நடைபெறும் என்று ஸார்வபௌம பட்டாட்சியரிடம் மன்னர் பிரதாபருத்ரர் வினவியபோது, அதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன என்று பட்டாச்சாரியர் பதிலளித்தார்.  மன்னருக்கு இவ்வாறு ஊக்கமளித்துவிட்டு,  ஸரர்வபௌம பட்டாச்சாரியர் தமது இல்லத்திற்குத் திரும்பினார். பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை நாளன்று,  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு  இதயத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்.  பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரையைக் கண்டு , ஶ்ரீ சைதன்ய மகாபிரபு பெரிதும் மகிழ்ச்சியுற்றார். ஆனால் அந்த விழாவிற்குப் பிறகு பகவான் ஜெகன்நாதர் ஓய்வெடுத்த காலத்தில், அவரை காண இயலாததால் சைதன்ய மகாபிரபு மிகவும் வருத்தமுற்றார் ரத யாத்திரை திருவிழாவிற்குப் 15 நாட்கள் முன்பாக நடைபெறும் ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்நான யாத்திரை நிகழ்ச்சிக்குப் பின்னர்,  ஜெகன்நாத விக்கிரகத்தின் திருமேனியில் மீண்டும் வண்ணம் தீட்டப்படுகிறது. இது முடிவுறுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகின்றது.  இந்த காலமானது "அனவஸர " என்று சொல்லப்படுகிறது. ப...