ஸ்ரீ ராதா ரமணன் விக்ரகம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஶ்ரீ ராதா ரமணர் கோவில், ஶ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமியினால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இவர் பிருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராவார். ஸ்ரீல கோபாலபட்ட கோஸ்வாமி, சைதன்ய மகாபிரபுவின் போதனைகளை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றி வந்தார். இவர் வழிபட்ட சாளகிராமத்திலிருந்து தோன்றிய ஶ்ரீ ராதா ரமணர் விக்கிரகமானது மிகவும் அழகாகவும், மந்தகாசப் புன்னகையுடன் கூடியதுமாகும். 500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தாவனத்தில் சாளகிராமத்திலிருந்து சுயம்புவாக ஶ்ரீல கோப்பாலபட்ட கோஸ்வாமியின் வேண்டுதலுக்கிணங்கி ஶ்ரீ ராதா ரமணன் விக்ரகமாக மாறினார். இங்கு மிக உயர்ந்த தரத்திலான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீ ராதா ரமணன் விக்ரஹம் 30 செ.மீ உயரமுள்ளது. கோபால பட்ட கோஸ்வாமியின் பிற சாள கிராமங்களும் இங்கு ஒன்றாக வழிபடப்படுகின்றன. ஸ்ரீ ராதா ரமணரின் விக்ரஹம் பிருந்தாவன கோஸ்வாமிகளின் விக்ரஹங்களில் தொன்மையானதாகும். இத்திருக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் அர்சா விக்ரகம் இல்லை. ஸ்ரீமதி ராதாராணியின் பெயரே வழிபாட்டில் உள்ளது. ஏனென...