Skip to main content

Posts

Showing posts from January 8, 2023

பகவானின் அவதார நோக்கம்

யதா ஹி அதர்மேண தமோ-தியோ ந்ருபா ஜீவந்தி தத்ரைஷ ஹி ஸத்வத: கில தத்தே பகம் ஸத்யம் ருதம் தயாம் யசோ பவாய ரூபாணி ததத் யுகே யுகே மொழிபெயர்ப்பு எப்போதெல்லாம் அரசர்களும், நிர்வாகிகளும் மிருகங்களைப் போல் மிகத்தாழ்ந்த குணங்களில் வாழ்கிறார்களோ, அப்போது உன்னத உருவிலுள்ள பகவான் அவரது பரம சக்தியை, வெளிப்படுத்துகிறார். மேலும் பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக்காட்டும் அவர், அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும், யுகங்களுக்கும் தேவையான அதே திவ்ய ரூபங்களையும் தோற்றுவிக்கிறார். பொருளுரை மேலே குறிப்பிட்டதுபோல், பிரபஞ்ச படைப்பு பகவானின் சொத்தாகும். இதுவே ஈசோபநிஷத்தின் அடிப்படைத் தத்துவமாகும். அனைத்தும் பரம புருஷரின் சொத்தாகும். எனவே ஒருவரும் அவருடைய சொத்தை ஆக்கிரமிக்கக் கூடாது. அன்புடன் அவரால் அளிக்கப்பட்டதை மட்டுமே ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, பூமியோ அல்லது வேறெந்த கிரகமோ அல்லது பிரபஞ்சமோ பகவானின் பூரண சொத்தாகும். ஜீவராசிகள் அவரது அங்க உறுப்புகளாக, அல்லது மகன்களாக உள்ளனர். இதனால் ஒவ்வொருவரும் அவரது நியமிக்கப்பட்ட செயலை நிறைவேற்றுவதற்கும், பகவானின் கருணையைப் பெற்று வாழ்வதற்கும்...