Skip to main content

Posts

Showing posts from November 23, 2021

எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை

  ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம். புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான, ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது. இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது. உணவு தானியங்கள், பால், பழம், மரம், கல், சர்க்கரை, பட்டு நூல், இரத்தினங்கள், பருத்தி, உப்பு, நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத் தேவைகள் பூரணமாக பகவானால் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரபஞ்சத்திலுள்ள மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், அதிலுள்ள ஒவ்வொரு கிரகத்திலும் வாழும் உயிரினங்களுக்கும், உணவு வழங்குவதற்கும், அவற்றின் நலத்தைப் பேணுவதற்கும் போதுமான அளவுக்கு பகவான் அளித்துள்ளார். தேவைகளைப் பூர்த்தி செய்பவர் பூரணமானவராவார். மேலும் மனிதன் இத்தேவைகளை பெறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டுமே சிறிது தேவைப்படுகிறது. செயற்கையான முறையில் வாழ்வின் வசதிகளை உண்டாக்கும் இயந்திரங்கள், கருவிகள் அல்லது மிகப்பெரிய இயந்திர சாதனங்கள் ஆகியவை தேவையில்லை...

ஆன்மீக முன்னேற்றப் பாதையிலுள்ள இடைஞ்சல்கள்

ஜன்மைஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீபிர் ஏதமான-மத: புமான் நைவார்ஹதி அபிதாதும் வை த்வாம் அகிஞ்சன-கோசரம் மொழிபெயர்ப்பு எம்பெருமானே, பகவானாகிய தங்களை சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் பௌதிக வாழ்வில் முற்றிலும் விரக்தி அடைந்தவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கௌரவமான குடும்பம், பெரும் செல்வம், உயர்ந்த கல்வி மற்றும் உடலழகு ஆகியவற்றில் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயலும், ஒருவரால் உண்மையான உணர்வுடன் உங்களை அணுக முடியாது. பொருளுரை கௌரவமான குடும்பத்தில் பிறந்து அதிகமான செல்வத்தைப் பெற்றிருத்தல், கல்வி மற்றும் கவர்ச்சியான உடழலகு ஆகியவற்றைப் பெற்றிருத்தல் பௌதிக முன்னேற்றமாக கருதப்படுகின்றன. பௌதிகவாதிகள் அனைவரும் இத்தகைய பௌதிக செல்வங்களைப் பெறுவதில் தீவிரமாக உள்ளனர். இதுவே பௌதிக நாகரிக முன்னேற்றம் எனப்படுகிறது. ஆனால் இச்செல்வங்களை எல்லாம் பெற்றிருப்பதால், நிலையற்ற அவ்வுடைமைகளில் மயங்கி திமிர் பிடித்தவர்களாக நடந்துகொள்கின்றனர். இதன் விளைவாக, இத்தகைய திமிர் பிடித்தவர்களால் பகவானின் புனித நாமத்தை, “ஓ கோவிந்தா, ஓ கிருஷ்ணா” என்று மனப்பூர்வமாக உச்சரிக்க இயலாது. ஒருமுறை பகவானின் புனித நாமத்தை உச்சரிப்பதால், பாவியொருவ...

பண்பாட்டைக் கைவிடும் பாரத மக்கள்

  மேற்கத்திய நாட்டினரையும் அந்நிய நாட்டினரையும் பின்பற்றுவதால் நாம் நமது சொந்த பண்பாட்டைக் கைவிட்டு விட்டோம். இந்தியர்களின் சுபாவம் மேற்கத்திய நாட்டினரிடமிருந்து வேறுபட்டிருப்பதால், மேற்கத்திய பண்பாட்டையும் இந்தியர்களால் சரியாக பின்பற்ற முடிவதில்லை. முந்தைய பிறவிகளில் ஆன்மீகப் பண்பாட்டை விருத்தி செய்ய விரும்பியவர்களே இந்தியாவில் பிறக்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்தியாவில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், ஒருவன் பிறந்ததும், இந்நாட்டின் முட்டாள் தலைவர்களும், முட்டாள் தந்தையும், முட்டாள் ஆசிரியர்களும், “ஆன்மீகப் பண்பாடு பயனற்றது, ஆன்மீகத்தில் ஆர்வம் இருந்ததால்தான் நம்மை ஆங்கிலேயர்கள் அடிமைகளாக்கினர். எனவே, அவற்றையெல்லாம் துறந்துவிட்டு தொழிற்கல்வியில் முன்னேறுங்கள்,” என்று கூறி அவனைக் கெடுத்து விடுகின்றனர். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பாவப்பட்ட இளைய தலைமுறையினர் என்ன செய்ய முடியும்? —தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், ஏப்ரல் 15, 1976ல் மும்பையில் அருளிய ஸ்ரீமத் பாகவத (7.12.4) உபன்யாஸத்தின் ஒரு பகுதி. 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆...