பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே மிகவுயர்ந்த வெற்றியைச் சுலபமாக ஒருவனால் அடைந்துவிட முடியும் என்பதால், பல வேதக் கிரியைகள் இருப்பதும் அவற்றால் மக்கள் கவரப்படுவதும் ஏன் என்று ஒருவர் கேட்கக்கூடும். பகவத்கீதை (15.15) பின்வருமாறு கூறுகிறது, வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை அணுகுவதே வேதக் கல்வியின் உண்மையான நோக்கமாகும். துரதிர்ஷ்டவசமாக, வேத யக்ஞங்களின் பகட்டில் மதிமயங்கியுள்ள அறிவிலிகள், ஆடம்பரமாக யாகங்கள் செய்யப்படுவதைக் காண விரும்புகின்றனர். வேத மந்திரங்கள் ஓதப்படுவதையும், இத்தகைய சடங்குகளுக்கு ஏராளமான பொருள் செலவிடப்படுவதையும் இவர்கள் விரும்புகின்றனர். சில சமயங்களில் இத்தகைய புத்தியற்ற மனிதர்களை திருப்திப்படுத்துவதற்காக நாம் வேதக் கிரியைகளை அணுஷ்டிக்க வேண்டியுள்ளது. பிருந்தாவனத்தில், பெரிய கிருஷ்ண பலராமர் ஆலயம் ஒன்றை சமீபகாலத்தில் நாம் நிறுவினோம். அப்பொழுது உள்ளூர் பிராமணர்களால் நடத்தப்பட்ட வேதக் கிரியைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டது. ஏனெனில் பிருந்தாவன வாசிகள், குறிப்பாக ஸ்மார்த்த - பிராமணர்கள் ஐரோப்பியர்களையும், அமெரிக...