Skip to main content

Posts

Showing posts from October 2, 2022

சாதுக்களை வீட்டில், வரவேற்று உபசரிக்கும் வழிமுறைகள்

 பதம் 10 அதனா அபி தே தன்யா: ஸாதவோ க்ருஹ - மேதின: யத் க்ருஹா ஹி அர்ஹ - வர்யாம்பு - த்ருண - பூமீஸ்வரா வரா: மொழிபெயர்ப்பு குடும்ப வாழ்க்கையில் பற்றுடையவன், பெரிய செல்வந்தனாக இல்லாது இருந்தபோதும் அவனது இல்லத்திற்கு தெய்வீக அருளாளர்கள் விஜயம் செய்தால் அவன் மிகவும் பெருமையுடையவனாகிறான். அவ்வருளாளர்களுக்கு நீரும், அமர்வதற்கான ஆசனமும், உபசாரப் பொருட்களும் வழங்கும் அந்த வீட்டின் எஜமானனும் பணியாட்களும் பெருமையடைகின்றனர். ஏன் அவனது இல்லமே பெருமையடைகின்றது. பொருளுரை இந்த உலகத்தில் ஒருவனிடம் பணம் இல்லையென்றால் அவன் பெருமையடைவது இல்லை, இல்லற வாழ்வில் மிகவும் ஈடுபாடுடைய ஒருவனுக்கு ஆன்மீக உலகில் பெருமைகள் இல்லை. ஆனால் பௌதீக அருளாளர்கள் ஓர் ஏழையின் குடிசைக்கோ அல்லது இல்லறத்தில் அதிக ஈடுபாடுடையவனிடமோ வருகை தருவதற்குத் தயாராகவே இருக்கின்றார்கள். இவ்வாறு நேரும் பொழுது அவ்வீட்டின் எஜமானும் அவனது பணியாட்களும் அப்பெரியவர்களின் பாதங்களைச் சுத்தம் செய்வதற்குத் தண்ணீரும் அமர்வதற்கு இருக்கைகளும் தந்து உபசரிப்பதினால் அவர்களும் பெருமை பெறுகின்றனர். முடிவாக நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் ஒரு சாதாரண மனிதன் கூ...