பகவான் ஸ்ரீ இராமர் வரலாற்று நாயகனா , கற்பனை காவிய நாயகனா ? வழங்கியவர் : ஸ்ரீ கிரிதாரி தாஸ் பகவான் ஸ்ரீ இராமரை கற்பனை காவியத்தின் நாயகன் என்று அடியேன் ஒருபோதும் எழுத மாட்டேன் என்பதை அறிந்துள்ள வாசகர்கள் , “ இவர் ‘ வரலாற்று உண்மை ’ என்றுதான் கூறப் போகிறார் , இதை ஏன் படிக்க வேண்டும் ? ” என்று எண்ணி விட வேண்டாம் . ஸ்ரீ இராமரை கற்பனை காவிய நாயகனாக மாற்றத் துடிக்கும் துஷ்டர்களுக்கும் அவர்களை நம்பும் துர்பாக்கியர்களுக்கும் அவர்களுக்கு பதிலளிக்கத் தெரியாத நம்மவர்களுக்கும் ஒரு தெளிவை வழங்க அடியேன் முயல்கிறேன் . எதிர்தரப்பினரின் வாதம் இராமரை கற்பனை நாயகனாகக் கூறுவோர் முன்வைக்கும் வாதம் : “ இராமாயணமே கற்பனை காவியம் என்பதால் , அதன் நாயகனும் கற்பனையே . இராமாயணத்தின் பல சம்பவங்கள் இடத்திற்கு இடம் வேறுபடுவதால் இராமாயணத்தை கற்பனை என்றே கருதுகிறோம் . வால்மீகி இராமாயணத்தில் இல்லாத விஷயங்கள் இதர மொழி இராமாயணங்களில் காணப்படுகின்றன . வால்மீகியின் கதைக்கும் மற்றவர்களின் கதைக்கும் ஆங்கா...