Skip to main content

Posts

Showing posts from January 16, 2023

பண்டிதரும் குதிரைக்காரனும்

ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் , அனைத்தும் கற்றவர் மற்றும்  புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்திருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை அழைத்திருந்தார்கள். பண்டிதரை அழைத்து  வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார். பண்டிதர் வந்தபோது அங்கே யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதர்கோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ணலாம்?’னு குதிரைக்காரனிடம் கேட்டார். ‘அய்யா! நான் குதிரைக் காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்...