தர்ம : க்வசித் தத்ர ந பூத-சௌஹ்ருதம் த்யாக க்வசித் தத்ர ந முக்தி-காரணம் வீர்யம் ந பும்ஸோ 'ஸதி அஜ-வேக-நிஷ்க்ருதம் ந ஹி த்விதீயோ குண-ஸங்க-வர்ஜித : மொழிபெயர்ப்பு ஒருவர் மதத்தைப் பற்றிய முழு அறிவுவை பெற்றிருந்தும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்புடையவராக இல்லாதிருக்கக்கூடும். மனிதராகவோ, தேவராகவோ உள்ள ஒருவரிடம் துறவு இருக்கக்கூடும் ஆனால் அதுவே முக்திக்குக் காரணமாவது இல்லை. ஒருவர் பெரும் சக்தியைப் பெற்றிருந்தும், அவர் நித்திய காலத்தின் சக்தியைத் தடுக்க இயலாதவராக இருக்கக்கூடும். வேறொருவர் ஜட உலகப்பற்றைத் துறந்தவராக இருக்கக்கூடும் இருப்பினும் அவரை பரமபுருஷ பகவானோடு ஒப்பிட முடியாது. ஆகவே ஜட இயற்கை குணங்களின் ஆதிக்கத்திலிருந்து ஒருவரும் முற்றிலும் விடுபட்டவரல்லர். பொருளுரை இச்சுலோகத்தில் தர்ம : க்வசித் தத்ர ந பூத ஸௌஹ்ருதம் எனும் கூற்று மிகவும் முக்கியமானதாகும். பல இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அவரவர் மத கொள்கைகளை உறுதியாக பின்பற்றினாலும், எல்லா ஜீவராசிகளிடமும் அவர்கள் சமமானவர்களாக இல்லாதிருப்பதை உண்மையாகவே நாம் காண்கின்றோம். உண்மைய...