Skip to main content

Posts

Showing posts from March 15, 2024

பரம உன்னதமான ஞானத்தை பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும்

  பாகவதம் , சுமார் அரை டஜன் சுலோகங்களில் , சுருக்கமாக , முழுமுதற் கடவுளால் பேசப்பட்டதும் , பகவானின் சக்தி வாய்ந்த பிரதி நிதித்துவமுமாகும் . அவர் பரிபூரணமானவர் . ஆதலால் , பகவத் விஞ்ஞானமாகிய ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து அவர் வேறுபட்டவரல்ல . இவ்விஞ்ஞானத்தை பிரம்மதேவர் பகவானிடமிருந்து நேரடியாகப் பெற்றார் . பின் நாரதரிடம் இதை அவர் ஒப்படைத்தார் . நாரதரும் அதை ஸ்ரீல வியாசதேவரிடம் ஒப்படைத்து அதை விரிவுபடுத்திக் கூறுமாறு கட்டளையிட்டார் . எனவே பரமபுருஷரைப் பற்றிய உன்னத அறிவு , பௌதிக கல்விமான்களால் ஏற்படுத்தப்பட்ட மனக் கற்பனையல்ல . இது ஜடக் குணங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டதும் , பரிசுத்தமானதும் நித்தியமானதுமான பூரண அறிவாகும் . எனவே பாகவத - புராணம் உன்னதமான ஓசை வடிவிலுள்ள பகவானின் நேரடியான அவதாரமாகும் . இந்த உன்னதமான அறிவை ஒருவன் சீடப் பரம்பரையில் வரும் பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து பெற வேண்டும் . இச் சீடப் பரம்பரை பகவானிடமிருந்து பிரம்ம தேவருக்கும் , பிரம்மதேவரிடமிருந்து நாரதருக்கும் , நாரதரிடமிருந்து வியாசருக்கும் ...

துன்பகரமான இப்பௌதீக உலகை கடவுள் ஏன் படைத்தார்

  அரசாங்கத்தில் ஒரு சிறைக் கூடத்தை உண்டாக்கியதற்காக மன்னரை ஒருவன் குறை கூறக் கூடாது . அதைப் போலவே , துன்பகரமான இவ்வுலகைப் படைத்ததற்காக பரமபுருஷரை ஓருவன் கண்டனம் செய்யக் கூடாது . சிறைக் கூடம் தேவையான ஒரு ஸ்தாபனமாகும் . இது அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர் களுக்காக உள்ளது . அதைப் போலவே , துன்பங்கள் நிறைந்த இந்த ஜட உலகம் பகவானால் படைக்கப்பட்ட தற்காலிகமான ஒரு ஏற்பாடாகும் . இது , பகவானை மறந்து , பொய்யான இத்தோற்றத்தை அடக்கியாள முயல்பவர்களுக்கென உள்ளதாகும் . ஆனால் பகவான் , வீழ்ந்த ஆத்மாக்களைத் தமது இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கிறார் . இக்காரணத்திற்காக அவர் அதிகாரப் பூர்வமான சாஸ்திரங்கள் , அவரது பிரதிநிதிகள் , மற்றும் சொந்த அவதாரங்கள் ஆகியவற்றின் மூலமாக பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு பல சந்தர்ப்பங்களை அளித்துள்ளார் . அவருக்கு இந்த ஜட உலகில் நேரடியான பற்று இல்லையாகையால் , அதன் சிருஷ்டிக்காக அவரை நிந்திக்கக் கூடாது . ஶ்ரீமத் பாகவதம் 2.7.50 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  க...