Skip to main content

Posts

Showing posts from March 14, 2021

அவந்தி பிராமணர்

  அவந்தி பிராமணர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 நாகரீகமற்ற மனிதர்களின் கடுஞ்சொற்கள் அம்புகளை விட அதிகமாக இதயத்தைத் துளைக்கின்றன. இருப்பினும் அவந்தி தேசத்து பிச்சாண்டி பிராமணரொருவர் துஷ்டர்களால்  தாக்கப்பட்ட போதுகூட இத்தொல்லைகளுக்கெல்லாம் தன் ஊழ்வினையே காரணம் என்று கருதி மிகுந்த அடக்கத்தோடுஅதைப் பொறுத்துக் கொண்டார். துஷ்டர்களால் விளைவிக்கப்படும் தொல்லைகளையும், குற்றங்களையும் எவ்வாறு ஒருவன் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற உதாரணத்தை  அவந்தி பிரமணரின் வரலாறு மூலம்   பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்  உத்தவருக்கு உபதேசம் செய்தார். ஒரு சமயம் அவந்தி என்ற நாட்டில் பெரும் செல்வந்தனும், சகல ஐசுவரியங்களின் பேறு பெற்றவனுமான ஒரு குறிப்பிட்ட பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் வணிகத் தொழில் செய்துவந்தான். ஆனால் கஞ்சனான அவன் காமுகனாகவும், பேராசைக்காரனாகவும், முன்கோபியாகவும் இருந்தான். தர்மமும், தேவையான புலன் நுகர்வு இல்லாத அவனது வீட்டில், குடும்ப அங்கத்தினர்களும் விருந்தினர்களும் வாக்கினால்கூட முறையாக உபசரிக்கப்படவில்லை . தேவையான காலங்களில் தன் சொந்த உடலுக்கு அவன் போதுமான புலன் நுகர்வைக் கொடுக்கவில்லை....