Skip to main content

Posts

Showing posts from February 8, 2022

பீஷ்மதேவரின் மரணம்

  தர்மம் ப்ரவததஸ் தஸ்ய ஸ கால : ப்ரத்யுபஸ்தித : யோ யோகினஸ் சந்த - ம்ருத்யோர் வான்சிதஸ் தூத்தராயண : மொழிபெயர்ப்பு பீஷ்மதேவர் தனி நபரின் கடமைகளைப் பற்றி விவரிக்கும்பொழுது சூரியன் வடதிசையின் அடிவானத்தில் சஞ்சரித்தது . இது , தங்கள் விருப்பப்படி உயிரைவிடும் யோகிகளால் விரும்பப்படும் நேரமாகும் . பொருளுரை பக்குவமடைந்த யோகிகள் தங்கள் விருப்பப்படி , பொருத்தமான ஒரு நேரத்தில் ஜடவுடலை விட்டு , அவர்கள் விரும்பிய ஒரு கிரகத்திற்குச் செல்கின்றனர் . பகவத் கீதையில் (8.24) பின்வருமாறு கூறப்படுகிறது : தங்களது விருப்பத்தை பரம புருஷரின் விருப்பத்துடன் இணைத்துக் கொண்ட தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால் , அக்னி தேவன் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் , சூரியன் வடக்குத் திசையின் அடிவானத்தில் சஞ்சரிக்கும்பொழுது , அவர்களுடைய ஜடவுடல்களை உகுத்து , ஆன்மீக வானத்தை அடைகின்றனர் . இந்த நேரம் உயிரை விடுவதற்கு ஏற்ற நேரம் என்று வேதங்களில் கூறப்படுகிறது . பக்குவமடைந்த யோகிகள் இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் . விரும்பிய நேரத்தில் உடல...

கிருஷ்ணரும், பீஷ்மரும்

  சித - விசிக - ஹதோ விசீர்ண - தம்ச : க்ஷதஜ - பரிப்லுத ஆததாயினோ மே ப்ரஸபம் அபிஸஸார மத் - வதார்தம் ஸ பவது மே பகவான் கதிர் முகுந்த : மொழிபெயர்ப்பு முக்தி அளிப்பவரான , அந்த பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக , எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல் , போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார் . அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது . மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது . பொருளுரை கிருஷ்ணரும் , பீஷ்மரும் போர்க்களத்தில் நடந்து கொண்ட முறை கவனத்தைக் கவர்வதாக இருந்தது . ஏனெனில் , கிருஷ்ணரின் செயல் அர்ஜுனனுக்குச் சாதகமாகவும் , பீஷ்மருக்கு பாதகமாகவும் இருந்ததைப் போல் காணப்பட்டது ; ஆனால் உண்மையில் சிறந்த பக்தரான பீஷ்மதேவருக்கு விசேஷ அன்பைக் காட்டுவதற்காகவே இவ்வளவும் நிகழ்ந்தன . ஓரெதிரியைப் போல் நடந்துகொள்வதாலும் பக்தரால் பகவானை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதே இத்தகைய விவகாரங்களின் பிரமிக்கச் செய்யும் அம்சமாகும் . பகவான் பரிபூரண...