Skip to main content

Posts

Showing posts from February 1, 2021

ரண்சோர் ராய்

 ரண்சோர் ராய்  🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு சமயம்  கார்க்கியன்   என்பவனை சால்வன், " கோழை என்றும் பேடி என்றும்  சொல்லி இழிவு படுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்கவில்லை. "என்னைப்  பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,''  என்று தவத்தில் ஈடுபட்டான். அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம். தந்தையின் எண்ணப்படி காலயவனன், யாதவர்களின் அரசனான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்  மீது பகை கொண்டு மதுராவை அழிக்க வந்தான். ஜராசந்தனும் அப்போது பதினேழாவது முறையாக  படையெடுத்து வந்ததால் மதுராவை விடுத்து  பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்  துவாரகையை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்தார். அதன்பின், பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, அங்கிருந்து  புறப்பட்டார். நாரதர் மூலம்...

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

தூய பக்தர்களின் மகிமை

 

சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல.

  சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல. யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஷ்ரத்தயார்சிதும் இச்சதி தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாம் ஏவ விததாம்-யஹம் மொழிபெயர்ப்பு எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன். பொருளுரை கடவுள் அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார்; எனவே, தேவர்களிடமிருந்து ஜட இன்பத்திற்கான வசதிகளைப் பெற்று அவற்றை அனுபவிக்க விரும்பினால், எல்லாருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றுள்ள பகவான் அதனை உணர்ந்து, அத்தகையவனுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கிறார். எல்லா உயிர்வாழிகளின் உன்னத தந்தையான பகவான், அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை, ஆனால் அவர்களது லௌகீக விருப்பங்கள் பூர்த்தியாகும் வகையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார். சர்வ வல்லமையுடைய கடவுள், ஜடவுலகை அனுபவிப்பதற்கான வசதிகளைக் கொடுத்து, அதன் விளைவாக மாயையின் வலையில் உயிர்வாழிகளை விழச் செய்வது ஏன் என்று சிலர் கேட்கலாம்....

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

  ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 பூஞ்சோலை ஓர் அழகிய நாடு. அந்நாட்டை நீதிநெறி தவறாமல் விஷ்ணுவரதன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். விஷ்ணுவரதனின் ஆட்சியில் மக்கள் எந்த ஒரு குறையும் இன்றி மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருநாள் அரசர் ஊர் திருவிழாவில் அந்தணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடுகள் தடபுடலாக செய்து கொண்டிருந்தார். அச்சமயம் வானில் ஒரு கழுகு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு உணவருந்தும் இடத்திற்கு மேல் பறந்துச் சென்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் சமைத்து வைத்திருந்த உணவில் விழுந்து விட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. எதையும் அறியாத அரசன் அந்த உணவை அந்தணர்களுக்கு அளித்தார். அந்த உணவை உண்ட மறுகணமே அந்தணர்கள் உயிர் துறந்தார்கள். இதைக் கண்டு அரசர் மிகவும் வருத்தம் கொண்டார். கர்ம வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. இந்த கர்மவினையை யாருக்கு கொடுப்பது.? கழுகிற்கா? பாம்பிற்கா? அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத்...

"அறியாமை" ஓரு காரணமாக ஏற்றுக்கொள்ள படுவதில்லை

  "அறியாமை" ஓரு காரணமாக ஏற்றுக்கொள்ள படுவதில்லை ************************* நாம் அனைவரும் ஜட இயற்கையின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமது நிலையினை கயிற்றினால் கட்டப்பட்ட குதிரை அல்லது காளையைப் போன்றதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஓட்டுநர் கயிற்றை இழுப்பதற்கு தகுந்தாற்போல அந்த விலங்கு செல்லும். அதற்கு சுதந்திரம் என்பதே கிடையாது. நாம் சுதந்திரமானவர்கள் என்று கருதி, “கடவுள் இல்லை. கட்டுப்படுத்துபவரும் இல்லை. நாம் விரும்பியதைச் செய்யலாம்” என்று கூறுவதெல்லாம் அறியாமையே. அறியாமையினால் நாம் பல பாவ காரியங்களைச் செய்கின்றோம். ஒருவன் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு அறியாமை வழியல்ல என்பதை நடைமுறை அனுபவத்தில் இருந்து நாம் அறிகிறோம். உதாரணமாக, ஒரு குழந்தை நெருப்பைத் தொடும்போது, குழந்தை அறியாமையில் தொடுகிறதே என்று நினைத்து, நெருப்பு குழந்தையைச் சுடாமல் விடுவதில்லை. குழந்தையாக இருந்தாலும் வயதானவராக இருந்தாலும், நெருப்பைத் தொட்டால் கண்டிப்பாகச் சுடும். எந்தவித மன்னிப்பும் கிடையாது. அதைப் போலவே, தெரிந்தோ தெரியாமலோ கடவுளின் சட்டத்திற்கு எதிராகச் செயல்...

உயர்ந்த பக்குவ நிலை.

  உயர்ந்த பக்குவ நிலை. ஜடவுடல் இருக்கும்வரை, உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல் எனும் உடலின் உந்துதல்களை சந்தித்துதான் ஆக வேண்டும். ஆனால் தூய பக்தி யோகத்தில் இருப்பவன் (கிருஷ்ண உணவினன்) உடலின் உந்துதல்களைச் சந்திக்கும்போது, அவன் தனது புலன்களைத் தூண்டுவதில்லை. மாறாக, வாழ்க்கைக்கான அத்தியாவசியத் தேவையை மட்டும் ஏற்றுக் கொண்டு, மோசமான நிலையையும் சாதமாக்கிக் கொண்டு, கிருஷ்ண உணர்வில் திவ்யமான ஆனந்தத்தை அனுபவிக்கின்றான். அவ்வப்போது நடக்கும் விபத்துகள், வியாதிகள், பஞ்சம், மிக நெருங்கிய உறவினரது மரணம் ஆகியவற்றை அவன் கண்டு கொள்வதில்லை, ஆனால் பக்தி யோகத்தின் (கிருஷ்ண உணர்வின்) கடமைகளில் அவன் எப்போதும் கவனத்துடன் உள்ளான். விபத்துகள் கடமையிலிருந்து அவனைப் பிறழச் செய்வதில்லை. பகவத் கீதையில் (2.14) கூறியுள்ளபடி, ஆகமாபாயினோ (அ)நித்யஸ் தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத. அவ்வப்போது வரும் இத்தகு நிகழ்ச்சிகளை அவன் பொறுத்துக் கொள்கிறான்; ஏனெனில், இவை வந்து போகக் கூடியவை என்றும், தனது கடமைகளை பாதிக்காதவை என்றும், அவன் அறிவான். இவ்விதமாக அவன் யோகப் பயிற்சியில் உயர்ந்த பக்குவ நிலையை அடைகிற...

பலராம் பூர்ணிமா மற்றும் ரக்ஷாபந்தன்

  பலராம் பூர்ணிமா மற்றும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டம் ******************************* இன்று ஶ்ரீதாம் மாயாபூரில். பலராம் பூர்ணிமா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அதில் பக்தர்கள் ராஜாபூரில் உள்ள ஜெகன்நாதருக்கும் , பலதேவருக்கு ராக்கி கயிற்றை பரிசாக அர்ப்பணித்தார்கள் .அதை பூசாரி சுபத்ரா தேவியிடம் கொடுத்து ஜெகன்நாதர் மற்றும் பலதேவர் கையில் கட்டினார். பகவான் கையில் உள்ள கயிற்றை பிரசாதமாக திருப்பி கட்டியதும்.பக்தர்களின் மனோபாவம் மற்றும் ஆனந்தத்தை காணமுடிந்தது. ரக்ஷாபந்தன் ******************* சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் பூர்ணிமா (முழு நிலவு) நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் ...

அயோத்தியா

  அயோத்தியா (பகவான் இராமசந்திரரின்  திருத்தலம்) வழங்கியவர் : ஜீவன கௌர ஹரி தாஸ் *********************************************************************************** அழகான சரயு நதிக்கரை, 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று, ஸ்ரீ இராமர் பிறந்த புண்ணிய பூமி, அவர் சுமார் 12,000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்தலம், சமீப கால இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய இடம் என பல்வேறு அடைமொழிகளைக் கொண்டு, உத்திர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற எமது நீண்டநாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது. இராம ஜென்ம பூமி அயோத்தியாவிற்குச் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்கக்கூடிய இடம், இராம ஜென்ம பூமி. பகவான் ஸ்ரீ இராமர் தனது லீலைகளை அரங்கேற்றுவதற்காக இவ்வுலகில் அவதரித்த இடம், தற்போது இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. அந்த சிறப்பு வாய்ந்த இடத்தைக் காண்பதற்காக நாங்களும் சென்றோம். சமீப காலத்தின் பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக, இராம ஜென்ம பூமி தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்விடத்தைச் சென்றடைய பல அடுக்கு பாதுகாப்பு சோதனைக...