Skip to main content

Posts

Showing posts from October 28, 2022

ஸ்ரீல பிரபுபாதர்

  ஸ்ரீல பிரபுபாதர் புலனின்பமே பிரதானம் ” என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.   தோற்றம் ஸ்ரீல பிரபுபாதர் என்று அனைவராலும் அழைக்கப்படும் தெய்வத்திரு. அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி அவர்கள், 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் கல்கத்தாவில், கௌர் மோகன் தே மற்றும் ரஜனி என்போரின் நன்மகனாய் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர், அபய் சரண் தே. அவரின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர், வருங்காலத்தில் இக்குழந்தை கடல் கடந்து சென்று, மிகப்பெரிய ஆன்மீக குருவாகி, 108 கோவில்களை நிறுவுவார் என்று முன்னுரைத்தார்.   இளமைப்பருவம் அபயின் தந்தை அவருக்கு சிறுவயதிலிருந்தே பக்தி நெறிகளை ஊட்டி வளர்த்தார். ஸ்ர...