Skip to main content

Posts

Showing posts from March 23, 2024

நேர்மையான செயல் எப்போதும் பக்திக்கு சாதகமானதாகும்

  பணத்தைத் திரட்டுவதன் மூலமாக , ஜட உலகில் ஒருவன் திமிர் பிடித்தவனாகாமல் , தனது வாழ்க்கைத் தேவையை சுலபமாகவும் , நேர்வையுடனும் சம்பாதிக்க வேண்டும் . பொய் புரட்டுகளின் மூலமாய் சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாவதை விட , நேர்மையான வாழ்க்கைத் தேவைக்காக ஒரு கூலியாக இருப்பது சிறந்தது . நேர்மையான உழைப்பால் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தனாக ஆவதில் குற்றமில்லை . ஆனால் செல்வம் திரட்டுவதற்காக , வாழ்க்கைக்குரிய நேர்மையான வழியை ஒருவன்தியாகம் செய்து விடக் கூடாது . இத்தகைய முயற்சி பக்தித் தொண்டிற்கு தீங்கிழைப்பதாகும் . 

எவ்வாறு துன்பக் கடலை கடப்பது

  பந்தப்பட்ட வாழ்வில் இருப்பதென்பது கடல் நடுவே ஒரு படகை ஓட்டுவதற்கு ஒப்பாகும் . சூழ்நிலை நன்றாக இருந்தால் , படகு மிகச் சுலபமாக ஓடும் . ஆனால் அங்கு புயல் காற்றோ , மூடுபனியோ , வீசும் காற்றோ அல்லது மேகமோ இருக்கு மானால் , கடலில் மூழ்கிவிடுவதற்கும் வாய்ப்புண்டு . எவ்வளவு நன்றாக ஆயத்தபபடுத்தப்பட்டு இருந்தாலும் , கடலில் திடீர் மாற்றத்தை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது . கப்பலால் கடல்களைக் கடந்துள்ளவனுக்கு , கடலின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது . ஆனால் பகவானின் கருணையால் ஜட வாழ்வெனும் கடலை ஒருவனால் மிகவும் சுலபமாகச் கடந்து விட முடியும் . புயல் காற்றுக்கோ அல்லது மூடுபனிக்கோ அவன் அஞ்ச வேண்டியதில்லை . இதல்லாம் பகவானின் விருப்பத்தைப் பொறுத்ததாகும் ; பந்தப்பட்ட வாழ்வில் சில துரதிர்ஷடமான ஆபத்து விளையுமானால் ஒருவராலும் உதவி செய்ய முடியாது . ஆனால் பகவத் பக்தர்கள் , கவலைப்படாமல் ஜட இருப்பெனும் கடலைக் கடந்து விடுகின்றனர் , ஏனெனில் தூய பக்தரொருவர் எப்பொழுதுமே பகவானால் பாதுகாக்கப்படுகிறார் ( பகவத் கீதை 9.13). பௌ...