யக்ஞத்துவஜா என்ற அரசன், தான் வாழ்ந்த காலத்தில் பல இடங்களில் விஷ்ணு கோயில் கட்டினான். ரேவா நதிக் கரையிலும் ஒரு கோயில் கட்டினான். அவன் கட்டிய எல்லாக் கோயில்களிலும், கோயிலைச் சுத்தம் செய்யும் பணியும், இரவில் விளக்கேற்றும் பணியும் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சி செய்தான். விதஹோத்ரா என்பவர் அந்த கோவில் புரோகிதராக இருந்தார் அவர் யக்ஞத்துவஜாவிடம், “அரசே! விஷ்ணு கைங்கர்யம் என்பதைப் பல வழிகளில் செய்யலாம். அவற்றை எல்லாம் விட்டுவிட்டுக் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், விளக்கேற்றுதல் ஆகிய இரு காரியங்களுக்காக மட்டும் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா? அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை?” என்று கேட்டான். இதைக் கேட்ட யக்ஞத்துவஜா அந்த புரோகிதரை நோக்கிச் பதில் உரைக்க ஆரம்பித்தார்.. "விதஹோத்ரரே ! எனக்கு ஜதீஸ்மரா என்ற முற்பிறப்பை உணரும் ஆற்றல் உண்டு. அதனால்தான் இவ்வாறு செய்கிறேன். சத்திய யுகத்தில் ரைவதா என்ற ஒரு பிராமணன் இருந்தான். வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்று தேர்தவராக விளங்கினர். ஆனால் அவர் கற்றதை அவனது வாழ்கையில் செயல்படுத்தியதே இல்லை . எத்தனை குற்றங்கள் புரிய முடிய...