"ராதா-கிருஷ்ணர்" இவ்விரு நபர்களின் இரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கு மாபெரும் ஆன்மீக நுண்ணறிவு தேவைப்படுகிறது.
ராதா க்ரிஷ்ண ஏக ஆத்மா, துஇ தேஹ தாரி' அன்யோன்யே விலஸே ரஸ ஆஸ்வாத₂ன கேரி மொழிபெயர்ப்பு ராதையும் கிருஷ்ணரும் ஒருவரே, ஆனால் அவர்கள் இரண்டு திருமேனிகளை ஏற்று, பிரேம ரஸங்களைச் சுவைத்து, ஒருவரையொருவர் அனுபவிக்கின்றனர். பொருளுரை: தெய்வீக நபர்களான ராதையும் கிருஷ்ணரும் பௌதிகவாதிகளுக்குப் புரியாத புதிராக உள்ளனர். ராதா - கிருஷ்ணரைப் பற்றி ஸ்ரீல ஸ்வரூப தாமோதர கோஸ்வாமியின் கையேட்டிலிருந்து வரும் மேற்கூறிய வர்ணனை ஒரு சுருக்கமான விளக்கமாகும், ஆனால் இவ்விரு நபர்களின் இரகசியத்தைப் புரிந்துகொள்வதற்கு மாபெரும் ஆன்மீக நுண்ணறிவு தேவைப்படுகிறது. ஒருவர் இருவராக அனுபவிக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் சக்திமானாகவும் ஸ்ரீமதி ராதாராணி அந்தரங்க சக்தியாகவும் உள்ளனர். வேதாந்த தத்துவத்தின்படி, சக்திமானுக்கும் சக்திக்கும் இடையில் வேறுபாடு இல்லை; அவை ஒன்றே. நெருப்பையும் வெப்பத்தையும் நம்மால் எவ்வாறு பிரிக்க முடியாதோ, அதுபோல அந்த ஒன்றினை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்த இயலாது. பக்குவமற்ற வாழ்வில் பூரணத்தைப் பற்றிய அனைத்தும் புரியாத புதிராகவே உள்ளது; எனவே, இத்தகைய சார்ந்த அறிவாற்றலின்படி, சக்திமானுக்கும் சக்திக்கும் இட...