Skip to main content

Posts

Showing posts from October 11, 2020

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு தனது மாயாவிலாசத்தை காண்பித்தல்

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு தனது மாயாவிலாசத்தை காண்பித்தல் ஆதாரம் - கர்க சம்ஹிதை வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 தேவரிஷி ஶ்ரீ நாரதர் மற்றும் பஹூலாஸ்வ மன்னருக்கும் (ஜனக மஹராஜனுக்கும் ) நிகழ்ந்த உரையாடல். ஶ்ரீ நாரதர் கூறினார். மன்னா ஒரு நாள் முனிவர்களில் சிறந்தவரான துர்வாசர் ஸ்ரீ கிருஷ்ண சந்திரனை தரிசிப்பதற்காக விரஜ மண்டலத்திற்கு வந்தார். அவர் மகாவனத்திற்கு அருகே புனிதமான காளிந்தி நதி (யமுனை நதி) கரையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை கண்டார். கோபால கிருஷ்ணன் சிறுவர்களுடன் அங்கு புரள்வது , மல்யுத்தம் செய்வதும், சிறுவர்களுக்கே உரியதான பாலலீலைகள் செய்து மனதைக் கொள்ளைக் கொள்பவராக திகழ்ந்தார். அவரது அங்கம் முழுவதும் மண் ஒட்டியிருந்தது. அவரது சுருண்ட கருங்குழல் சோபையுற்றது. நிர்வாணமாக சிறுவர்களுடன் ஓடிய பகவான் ஶ்ரீ ஹரியைக் கண்ட துர்வாசரின் மனதில் மிகுந்த வியப்பு உண்டாயிற்று. இவன் ஆறு வகை ஐஸ்வர்யங்களால் (அழகு, அறிவு, செல்வம்,வலிமை, புகழ், துறவு) முழுவதும் நிரம்பிய அதே ஈஸ்வரனா ? அப்படியானால் இவன் சிறுவர்களோடு ஏன் மண்ணில் புரண்டு கொண்டிருக்கிறான் ? என் பார்வையில் இவன் ந...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான அஷ்டவக்ர முனிவர்

பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான அஷ்டவக்ர  முனிவர் ஆதாரம் :- பிரம்மவைவர்த்த புராணம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் ராதையும் காட்டின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆலமரத்தின் கீழ் ஓய்வு எடுப்பதற்காக வந்தனர். அப்போது கிருஷ்ணர் பல பழமையான இனிமையான கதைகளையும் அதனுள் மறைந்திருக்கும் அர்த்தத்தையும் ராதையிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது மாமுனிவரான அஷ்டவக்ரர் அவ்வழியே கடந்து சென்றார். அஷ்டவக்ரர் மிகக் குள்ளமாகவும் உடல் கருமையான நிறத்துடனும் தேகத்தில் வஸ்திரம் எதுவும் இல்லாமலும், அவரது உடல் ஒரு அமைப்பு இல்லாமலும் காணப்பட்டார். அஷ்டவக்ரரின் தவவலிமையின் காரணமாக அவரது வாயிலிருந்து தீச்சுவாலை வெளிப்பட்டது. வித்தியாசமான அவரது தோற்றத்தைப் பார்த்து ராதை சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால் கிருஷ்ணர் அவளைக் கட்டுப்படுத்தினார். முனிவர் கிருஷ்ணரின் முன் தனது சிரம் தாழ்த்தி வணங்கி தான் முன்பு சிவபெருமானிடமிருந்து பெற்ற ஸ்தோத்திரங்களை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் முன்பு ஓதினார். பின் கிருஷ்ணரின் தாமரை பாதத்தில் விழுந்து உடனே தன் உடலை துறந்தார். அவரது உடலிலிருந்து...

ராஜா குலசேகரர்

முன்னொரு காலத்தில் குலசேகரர் என்பவர் ஒரிசாவை ஆண்டு வந்தார். அவர் ஒரு பராக்ரமசாலி, நிர்வாகத்தில் கடுமையாக இருந்தவர், அவரது தேக காந்தி சூரியனைப் போல ஜொலித்தது; இதயமோ கடல்போல் ஆழமாய் இருந்தது. கேட்டது தரும் கற்பகவிருட்சம் போல அவர் தயாள குணம் கொண்டவர்; கல்வி அறிவில் பிருஹஸ்பதிக்கு நிகராக விளங்கினார். பூமித்தாய் போல அவ்வளவு பொறுமைசாலியாய் இருந்தார். அழகில் மன்மதனுக்கு நிகராக இருந்தார். நற்சிந்தனையும் நன்னடத்தையும் கொண்டிருந்தார். அவருடைய செல்வமோ குபேரனுடையதைப் போன்றிருந்தது. அவர் தன் பிரஜைகளை தன் சொந்த பிள்ளைகளைப் போல பாதுகாத்தார். அவர் தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் அடிபணிந்து நடப்பவர். அதுமட்டுமின்றி ராஜா குலசேகரர் பக்தியுடன் அவர் தன் ஆன்மிக குரு மற்று தூய பக்தர்களின் தாமரைத் திருவடிகளுக்கு சேவை செய்தும் சதா காலமும் மிகவும் அடக்கமான முறையில் ஹரி கதையை கேட்டும் வாழ்ந்து வந்தார்.. ஒரு நாள் ராஜா குலசேகரர், மந்திரிகளும் போர்வீரர்களும் புடைசூழ சிம்மாசனத்தில் கொலுவீற்றிருந்தார். அவரை சுற்றி பல சாதுக்களும், சந்யாசிகளும் கூடியிருந்தார்கள். இவர்கள் வர்ணிக்கும் ஹரிகதையை அரசர் மெய்மறந்து கேட்டுக் ...

முசுகுந்தர் முக்தி

  முசுகுந்தர் முக்தி 🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ கிருஷ்ணர் தமது குடும்ப அங்கத்தினர்களை துவாரகை கோட்டைக்குள் பத்திரமாக வைத்தபின் மதுராவிற்குச் சென்றார். சந்திரன் உதித்தாற் போல் அவர் தோன்றினார். ஸ்ரீ கிருஷ்ணரின் பிரகாசமாக ஜொலித்த உடல், பகவானைப் பற்றி நாரதர் விவரித்த வர்ணனை யுடன் ஒத்திருப்பதைக் கண்ட காலயவனன், அவர் பரமபுருஷர் என்பதைப் புரிந்து கொண்டான். பகவான் நிராயுத பாணியாக இருப்பதைக் கண்ட காலயவனன், தன் சொந்த ஆயுதங்களை ஒருபக்கம் வைத்து விட்டு, அவருடன் போரிட விரும்பி பகவானை நோக்கி அவர் பின்னால் ஓடினான். ஸ்ரீ கிருஷ்ணரும் காலயவனனின் முன் அவனது கை கெட்டிய தூரத்தில் ஓடினார். இப்படியே ஒரு மலைக்குகையை நோக்கி ஓடிய பகவான், அவனை நீண்ட தூரம் தம்மை பின்தொடரச் செய்தார் இப்படிப் பின்தொடர்ந்து ஓடிய காலயவனன், பகவானை நோக்கி பழிச் சொற்களை அள்ளி வீசினான். ஆனால் அவனுடைய பாவ கருமங்களின் இருப்பு இன்னும் குறையாததால், பகவானை அவனால் பிடிக்க முடியவில்லை . ஸ்ரீ கிருஷ்ணர் குகைக்குள் பிரவேசித்தார் அவரைப் பின்தொடர்ந்து குகைக்குள் சென்ற அவன், ஒரு மனிதர் தரையில் படுத்திருப்பதைக் கண்டு அவரைக் கிருஷ்ணர் என்றெண்ணி, காலால் உதை...

ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பொக்கிஷமாவர்.

  ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பொக்கிஷமாவர். ஒருமுறை ஸ்ரீமதி ராதாரணியும் பகவான் கிருஷ்ணரும் மற்ற சகிகளுடன் நீராடிக்கொண்டிருந்தனர். நீராடி முடித்தவுடன், அவர்கள் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் அங்கு ஒரு ஏழை பிராமணர் வந்தார். அவர், "எனக்கு திருமண வயதில் ஒரு புதல்வி இருக்கிறாள். என்னிடம் பணம் இல்லாததால் அவளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை. ஆகையால் எனக்கு பண உதவி செய்யுங்கள்", என்று கேட்டார். இதை கேட்ட பகவான் கிருஷ்ணர், " ஸ்ரீமதி ராதா தான் என்னிடம் உள்ள செல்வங்களில் சிறந்தவர். ஆகையால் என்னுடைய சொத்தான அவரை எடுத்துக்கொள்ளுங்கள் ", என்று பதிலளித்தார். இதை கேட்ட பிராமணர் தன் தலையில் அடித்துக்கொண்டு, "என்னுடைய ஒரு புதல்விக்கே திருமணம் செய்ய முடியாமல் நான் தவிக்கின்றேன். நீங்கள் செல்வத்திற்கு பதிலாக இன்னொரு புதல்வியை தருகிறேன் என்று கூறுகிறீர்கள்", என்று கூறினார். இதை கேட்ட கிருஷ்ணர், நிலைமை புரிந்து கொண்டு, ஸ்ரீமதி ராதாராணியை தராசின் ஒரு பக்கம் அமர வைத்து, மறுபக்கம் அவரின் எடைக்கு சமமான தங்கத்தை வைத்து, அந்த தங்கத்தை பிராமணருக்கு வழங்கினார். மிகவும் ...