Skip to main content

Posts

Showing posts from February 25, 2022

பகவான் கிருஷ்ணரை எத்தனை முறை பார்தாலும் சலிப்படைவதில்லை

நித்யம் நிரீக்ஷமானானாம் யத் அபி த்வாரகௌகஸாம் ந வித்ருப்யந்தி ஹி த்ருச : ஸ்ரீயோ தாமாங்கம் அச்யுதம் மொழிபெயர்ப்பு துவாரகா வாசிகள் , அழகுக் களஞ்சியமான குறையற்ற பகவானை அடிக்கடி காண்பதில் பழக்கப்பட்டிருந்தனர் என்றபோதிலும் , அதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்படவில்லை . பொருளுரை தங்களது மாளிகைகளின் உச்சிக்கு ஏறிச் சென்ற துவாரகாபுரி பெண்கள் , பகவானின் குறையற்ற அழகிய திருவுடலை இதற்கு முன் தாங்கள் பலமுறை கண்டிருப்பதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்க்கவில்லை . பகவானைக் காண்பதில் அவர்களுக்கு திகட்டல் உண்டாகவில்லை என்பதையே இது குறிக்கிறது . பௌதிக அழகு கொண்ட எதையும் சில முறைகள் காண்பதால் முடிவில் அது கவர்ச்சியற்றதாகிவிடுகிறது . இது திகட்டச் செய்யும் விதியாகும் . இவ்விதியால் ஜடவுலகில் மட்டுமே செயற்பட முடியும் . ஆன்மீக உலகில் இதற்கு இடமில்லை . குறையற்றவர் என்ற சொல் இங்கு கவனிக்கத்தக்கதாகும் . ஏனெனில் , தனிப்பெருங் கருணையால் பகவான் பூமியில் அவதரித்தபோதிலும் , அவர் குறையற்றவராகவே இருக்கிறார் . ஜீவராசிகள் குறையுடையவர்கள...

விருந்தாவனத்து கோபியர்களின் உண்மையான தன்னலமற்ற பிரேம பக்தி

ஒரு முறை துவாரகையில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை காண நாரத மகரிஷி வந்தார் அப்போது அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருக்கையில் நாரத முனிவர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நோக்கி கேட்டார். துவாராகையில் உள்ள தங்களது பத்தினிகளை விட விருதாவனத்தில் இருக்கும் கோபிகைகளிடம் தங்கள் மனம் எப்போதும் எண்ணி கொண்டிருப்பதன் காரணம் என்ன. அதை நான் எவ்வாறு உணர்ந்து கொள்வது என்றார். பகவான் கிருஷ்ணரும் நாரதரை நோக்கி சிரித்து பின்னர் மௌனமானார். சிறிது நேர உரையாடலுக்கு பின்னர்  பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நாரதரை நோக்கி எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது" என்று சொன்னார். அதற்கு நாரதர், "இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள், எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்" என்று சொன்னார். கிருஷ்ணரும், "நாரதரே! எங்கும் செல்ல வேண்டாம். இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னார். ருக்மிணியும் ஸத்யபாமாவும்,"எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்...