Skip to main content

Posts

Showing posts from February 4, 2021

ஶ்ரீ கௌர நித்யானந்தேர தயா

 ஶ்ரீ கௌர நித்யானந்தேர தயா வழங்கியவர் :- லோசன தாஸ் தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🍁🍁🍁🍁 பரம கருண பஹு துஇ ஜன  நிதாய் கௌரசந்த்ர  ஸப அவதார ஸார ஷி ரோமணி  கேவல ஆனந்த கந்த மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ  நித்யானந்தரும் பகவான் ஶ்ரீ கௌரசந்திரரும் மிகமிக கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். ஆனந்தத்தை மட்டுமே வழங்கக்கூடிய கீர்த்தனம் மற்றும் நர்த்தன வழிமுறையை அறிமுகப்படுத்தியது இந்த அவதாரங்களின் விசேஷ முக்கியத்துவமாகும் பதம் 2 🍁🍁🍁🍁 பஜோ பஜோ பாஇ  சைதன்ய நிதாய்  ஸுத்ரிட  விஷ்வாஸ கரி  விஷய சாடியா ஸே ரஸே மஜியா  முகே போல ஹரி ஹரி மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 அன்புள்ள சகோதரர்களே பகவான் சைதன்யரையும் நித்யானந்தரையும் திடமான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன். இந்த வழியில் கிருஷ்ண உணர்வை அடைய ஒருவன் விரும்பினால், அவன் தன்னுடைய புலனின்ப ஈடுபாடுகளைத் துறக்க வேண்டும். பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரின் வழிபாட்டில் மூழ்கி, எந்த பௌதிக நோக்கமும் இன்றி, "ஹரே கிருஷ்ண ஹரி ஹரி என்று உச்சரிப்பீராக ப...

பகவான் புத்தராக அவதரித்த நோக்கம்

 பகவான் புத்தராக அவதரித்த நோக்கம் 🍁🍁🍁🍁🍁🍁 தத: கலௌ ஸம்ப்ரவ்ருத்தே ஸம்மோஹாய ஸுர த்விஷாம் புத்தோ நாம்னாஞ்ஜன-ஸுத:கீகடேஷு பவிஷ்யதி தத—அதன் பிறகு; கலௌ—கலி யுகம்; ஸம்ப்ரவ்ருத்தே—விளைந்ததால்; ஸம்மோஹாய—ஏமாற்றும் நோக்கத்திற்காக; ஸுர—ஆத்திகர்கள்; த்விஷாம்—பொறாமை கொண்டவர்கள்; புத்த:—பகவான் புத்தர்; நாம்னா—எனும் பெயர் கொண்ட; அஞ்சன-ஸுத:—அவரது தாயார் அஞ்சனையாவார்; கீகடேஷு—கயா (பீகார்) மாநிலத்தில்; பவிஷ்யதி—நிகழும். மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 பிறகு, கலி யுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வராக புத்த பகவான் தோன்றுவார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும். பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுளின் ஒரு சக்தி வாய்ந்த அவதாரமான பகவான் புத்தர், அஞ்சனா தேவியின் புதல்வராக கயா (பீகார்) மாநிலத்தில் தோன்றினார். அவர் தமது சொந்த கருத்தான அகிம்சையைப் பிரசாரம் செய்து, வேதங்களில் அனுமதிக்கப்பட்ட மிருக பலியையும் கூட நிராகரித்தார். புத்த பகவான் தோன்றிய சமயத்தில், மக்கள் பொதுவாக நாஸ்திகத் தன்மை கொண்டவர்களாகவும், மிருக மாமிசத்தை விரும...