Skip to main content

Posts

Showing posts from March 6, 2024

“ஸிவோ (அ)ஹம்” - “நான் சிவபெருமான்”

  சிவபெருமான் ஆடம்பரமான ஆடைகள் , ஆபரணங்கள் , மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதில்லை . ஆனால் இறுதியில் நாய்கள் தின்னப் போகும் இந்த உடலை அலங்கரிப்தில் மோகங்கொண்டவர்கள் அதைத் தானானக் கருதி மிகவும் ஆடம்பரமாக போற்றிப்பாதுகாக்கின்றனர் . இம்மனிதர்கள் சிவபெருமானைப் புரிந்து கொள்வதில்லை . மாறாக ஆடம்பரமான செல்வ வளத்திற்காக அவர்கள் அவரை அணுகுகின்றனர் . இரண்டு வகையான பக்தர்கள் சிவபெருமானுக்கு உண்டு . ஒரு பிரிவினர் முழு லோகாயத வாதிகள் அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வளங்களை சிவபெருமானிடம் வேண்டுகின்றனர் . மற்றொரு பிரிவினர் அவரோடு ஒன்றாக இணைய வேண்டுமென்று விருமபுகின்றனர் . அவர்கள் பெரும்பாலும் மாயாவாதிகள் ஆவர் . அவர்கள் “ ஸிவோ ( அ ) ஹம் ” “ நான் சிவபெருமான் ” அல்லது “ முக்தி பெற்ற பிறகு நான் சிவபெருமானுடன் இணைவேன் ” என்று ஓதுகின்றனர் . மாறாக கர்மாக்ளும் , ஞானிகளும் பொதுவாக சிவபெருமானின் பக்தர்களேயாவர் . ஆயினும் அவர்கள் அவரது உண்மை நோக்கத்தினை அறிந்து கொள்வதில்லை . சில நேரங்களில் சிவபெருமானின் பக்தர்கள் அவரை...

வைஷ்ணவானாம் யதா ஸம்பு

  “ வைஷ்ணவானாம் யதா ஸம்பு ”: அதாவது எல்லாப் பக்தர்களிலும் சிறந்தவர் சிவபெருமானே என்று சொல்லப்படுகின்றது . ஆகையினால் பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் அனைவரும் சிவபெருமானின் பக்தர்களும் ஆவர் . பிருந்தாவனத்தில் கோபீஸ்வரன் கோயில் எனப்படும் சிவபெருமான் ஆலயம் இருக்கின்றது . கோபியர்கள் சிவபெருமானை மட்டுமல்லாது காத்யாயனி என்னும் துர்கையையும் வழிபடுகின்றனர் . ஆனாலும் அவர்களது நோக்கம் பகவான் கிருஷ்ணரின் கருணையைப் பெற வேண்டும் என்பதாகவே இருக்கின்றது . பகவான் கிருஷ்ணரின் பக்தன் சிவபெருமானை நிந்திப்பதில்லை மாறாக அவனும் சிவபெருமானை , சிறந்த பக்தர் என்று வணங்குகிறான் . ஆகையினால் சிவபெருமானை வணங்கும் பக்தன் , கிருஷ்ணரின் அருளைப் பெறவேண்டும் என்றே அவரை வணங்குகின்றானே ஒழிய வேறு எந்தவித பொருள் இன்பத்திற்காகவும் அல்ல . இது பகவத்கீதையிலும் (7.20) பொருட் செல்வம் வேண்டியே மக்கள் பொதுவாக பிறதேவர்களை வழிபடுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது . “ கானமஸ்தைஸ் தைர் ஹ்ருத ஜ்ஞானா :” பொருளாசையே ஒருவனைத் தேவர்களை வணங்கத் தூண்டுகிறது . ...