Skip to main content

Posts

Showing posts from October 8, 2023

தன்னையே தனது சூழ்நிலைகளின் தலைவனாக எண்ணிக் கொள்கொள்ளும் உயிர்வாழி

  உயிர்வாழிகள் எவ்வாறு ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாற்றமடைகின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதில் இந்தப் மிகவும் முக்கியமானதாகும். இரண்டாம் அத்தியாயத்தில், ஆடையை ஒருவன் மாற்றிக் கொள்வதுபோல, உயிர்வாழி ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாற்றமடைகின்றான் என்று விளக்கப்பட்டது. ஜட வாழ்வின் மீதான அவனது பற்றுதலே இந்த உடை மாற்றத்திற்கு காரணம். இந்த பொய்யான தோற்றத்தினால் அவன் கவரப்பட்டுள்ள வரை, ஓர் உடலி லிருந்து மற்றொரு உடலிற்கு மாறுவதை அவன் தொடரத்தான் வேண்டும். ஜட இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அவனது விருப்பத் தினால் அவன் இத்தகு விரும்பத்தகாத சூழ்நிலைகளில் வைக்கப்படு கின்றான் . பௌதிக ஆசைகளின் காரணத்தினால், ஆத்மா சில சமயம் தேவனாக, சில சமயம் மனிதனாக, சில சமயம் மிருகமாக, சில சமயம் பறவையாக, சில சமயம் புழுவாக, சில சமயம் நீர்வாழியாக, சில சமயம் புனிதமான மனிதனாக, சில சமயம் பூச்சியாகவும் பிறக்கின்றான். இது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவ்வெல்லா நிலைகளிலும் உயிர்வாழி தன்னையே தனது சூழ்நிலைகளின் தலைவனாக எண்ணிக் கொள்கின்றான், இருப்பினும் அவன் ஜட இயற்கையின் ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்ட...

அற்பத்தனத்திற்கான விலை

முன்னொரு காலத்தில் உபபர்ஹணா என்றறியப்படும் கந்தர்வன் ஒருவர் இருந்தார். கந்தர்வர்கள் சுவர்க்க லோகத்தில் வாழும் தேவர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் மிகவும் அழகான தோற்றடயவர்களாகவும், நன்றாகப் பாடும் திறனுடையவர்களுமாகவும் இருந்தனர்.  இவர்கள் வாழும் கிரஹம் கந்தர்வ லோகம் என்றறியப்படுகிறது. உபபர்ஹணா மிகவும் அழகான தோற்றமுடையவராக, அவரது முகம் கவர்ச்சி மிக்கதாகவும், கட்டுமஸ்தான தேக அமைப்பையும் பெற்றிருந்தார். இதனால் பிற கந்தர்வர்களும் கூட இவரை மதித்தனர். இவர் மலர் மாலைகளாலும், சந்தனக் குழம்பினாலும், அழகு சாதனப்பொருட்களினாலும் மற்றும் ஆவரணங்களினாலும் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்வதில் நிபுணராகத் திகழ்ந்தார். அவர் அங்கு வாழ்ந்த பெண்களுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். ஒரு சமயம் சுவர்க்கலோக வாசிகள் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றித் துதிக்கும் பொருட்டு ஆன்மீக விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர். எல்லா விதத்திலுமுள்ள தேவர்களையும் அதாவது கந்தர்வர்கள் மற்றும் அப்ஸரசுக்களும் அவ்விழாவில் பங்கெடுக்க அழைக்கப்பட்டிருந்தனர். உபபர்ஹணாவும் பல அழகிய பெண்கள் புடை சூழ அவ்விழாவிற்...