Skip to main content

Posts

Showing posts from August 20, 2021

ஸ்ரீல ரூபகோஸ்வாமி கண்ட ஊஞ்சல் லீலை

  ஸ்ரீல ரூபகோஸ்வாமி கண்ட ஊஞ்சல் லீலை மொழிபெயர்ப்பு  :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் அற்புதமான ஊஞ்சல் உத்ஸவ லீலைகளை ஸ்ரீல ரூபகோஸ்வாமி ராதாகுண்டத்திலுள்ள இம்லிதலாவில் அனுபவித்து மகிழ்ந்தார் .   ராதாகுண்டத்திலுள்ள இம்லிதலா - கோவர்தனத்தில் உள்ள ஒரு பெரிய புளியமரம் , அங்குதான் ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் அற்புதமான ஜூலன் லீலை ( ஊஞ்சல் உத்ஸவம் ) நடைபெற்றதாக ஸ்ரீல ரூபகோஸ்வாமியால் கண்டறியப்பட்டது . ' இம்லி ' என்ற வார்த்தைக்கு புளி என்றும் ' தலா ' என்றால் இடம் என்றும் பொருள்படும் . ஒரு முறை ஸ்ரீல ரூபகோஸ்வாமி ராதாகுண்டத்தில் இருந்த பொழுது   அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தின் அடியில் அமர்ந்து பகவானின் புனித நாமங்களை ஆழ்ந்து உச்சரிப்பதில் ஈடுபட்டிருந்தார் . அப்போது மரத்தின் கிளையொன்றில் அழகான ஒரு ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார் . அவ்வூஞ்சலானது இரண்டு பேர் முகத்திற்கு முகம் பார்த்து அமர்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது . திடீரென்று அங்கு பகவான் கிருஷ்ணர...