Skip to main content

Posts

Showing posts from June 25, 2021

பாகவத கதைகளும் பொழுதுபோக்கும்

  வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியத்துவம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது லீலைகளை நிறைவேற்றி விட்டு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் சென்றவுடன், ஸ்ரீமத் பாகவதம் அவரது இலக்கிய அவதாரமாக தோன்றியுள்ளது. இந்த பாகவத சூரியன் கலி யுகத்தின் இருளில் தவிக்கும் மக்களுக்கு ஒளி கொடுப்பதற்காகவே உதயமாகியுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43) வேத ஞானம் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகிய இந்த பாகவதம், ஸ்ரீல வியாஸதேவரால் அவரது முதிர்ச்சி பெற்ற பக்குவநிலையில் வேதாந்த சூத்திரத்தின் ஒரு விளக்கவுரையாக எழுதப்பட்டது. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3) எனவே, கிம் வா பரைர், பாகவதத்தைப் படிப்பவருக்கு வேறு எந்த நூலும் அவசியமில்லை என்று சொல்லும் அளவிற்கு இது தலைசிறந்த சாஸ்திரமாக உள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2) இதனால்தான், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீமத் பாகவதம் பிரமாணம் அமலம், “ஸ்ரீமத் பாகவதமே பரம்பொருளை நிலைநாட்டுவதற்கான சாஸ்திரங்களில் களங்கமற்ற உயர்ந்த சாஸ்திரம்,” என்று குறிப்பிட்டுள்ளார். பாகவதத்தைச் செவியுருதல் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீமத் பாகவதம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது...