Skip to main content

Posts

Showing posts from November 15, 2024

துளசி தேவியின் தோற்றம்

  துளசி தேவியின் தோற்றம் தருமத்வஜன் என்கிற அரசனுக்கும் அவரது மனைவி மாதவிக்கும் கார்த்திகை மாதம் பௌர்ணமியும், சுக்ரவாரமும் கூடிய சுபதினத்தில் லக்ஷ்மிதேவியின் அம்சமாக துளசி தேவி அவதரித்தார். பருவ வயது வந்தவுடன் துளசி தேவி பதரிகாச்ரமம் சென்று பகவான் ஸ்ரீமந் நாராயணரையே நாயகனாக அடைய வேண்டுமென்று பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரியலானார். பிரம்மதேவர் அவர் முன் தோன்றி,"துளசி நீ விரைவில் சங்கசூடனை மணப்பாய்" என்று வரமருள, அதற்கு துளசி, "நான் தங்களிடம் நாராயணனை அடைய வேண்டுமென்றுதான் தவமிருந்தேன் ஆனால்..." என்றதும், பிரம்மா "நீ முன் ஜென்மத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை மோகித்ததால் ஸ்ரீமதி ராதாராணி உன் மீது கோபம் கொண்டு உன்னை பூவுலகில் மானிட யோனியில் பிறக்குமாறு சபித்திருக்கிறாள். அதனால்தான் நீ இங்கு பிறந்திருக்கிறாய். கிருஷ்ணரின் அருளால் விரைவில் அவரையே பதியாக அடைவாய். ஆனால் அதற்கு முன்பு, முற்பிறவியில் கிருஷ்ணரின் அங்கத்தில் தோன்றிய சுதர்மாவும், கிருஷ்ணருக்காக ஸ்ரீமதி ராதாராணியிடம் ராக்ஷஸத்தனமாக வாதாடியதால் ராதாராணியின் சாபத்திற்குள்ளாகி சங்கசூடன் என்னும் ராக்ஷஸனாக பூமியில் ப...

துளசி மஹாத்மியம்

  துளசி  மஹாத்மியம் ( கர்க சம்ஹிதை / அத்தியாயம் 16 /  வ்ருந்தாவன கண்டம் / துளசி பூஜை ) ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'அரசே!', ஸ்ரீ ராதாவின் பேச்சைக் கேட்டு தோழிகளில் சிறந்தவளான சந்திரானனா தன் இதயத்துள் ஒருகணம் யோசித்து பின் பின்வருமாறு பதில் கூறினாள்.' சந்திரானனா கூறினாள்: 'ராதே! சிறந்த சௌபாக்யமளிப்பதும், மிகுந்த புண்ணியத்தைத் தருவதும் ஸ்ரீகிருஷ்ணனையே அளிக்கக்கூடிய வரம் தருவதுமான விரதம் துளசிக்கு சேவை செய்வதாகும். என் கருத்தின்படி துளசி சேவையையே நீ நியமமாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் துளசியை ஸ்பரிசிப்பதோ, தியானம் செய்வதோ நாம கீர்த்தனம், துதி செய்வதோ, செடியை நட்டு, நீரூற்றி துளசி தளத்தாலேயே தினமும் பூஜை செய்யப்பட்டால் அது பெரிய புண்ணியத்தை அளிப்பதாகிறது. சுபே!, தினந்தோறும் துளசியிடம் ஒன்பது வகையான பக்தி செய்பவர்கள் கோடி ஆயிரம் யுகங்கள் தனது அந்த நற்செயலின் உத்தமமான பலனை அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் நட்ட துளசி, கிளை, சிறு கிளை,விதை, மலர் மற்றும் அழகிய இலைகளோடு பூமியில் வளர்ந்து கொண்டிருக்கும்வரை அவர்களது வம்சத்தில் பிறவியெடுப்பவர்கள் அனைவரும் நட்ட மனிதனோடு கூட இரண்டாயிரம் கல்பங்கள...