Skip to main content

Posts

Showing posts from January 7, 2025

நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தில் அனுமதிக்கப்படாத அல்லது தூய பக்தர்களால் பாடப்படாத பாடல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆலயத்தில் சினிமாப் பாடல்களைப் பாடுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

  பகவானை நாம் காண நேர்ந்தாலும், அவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகக்கூடும். கிருஷ்ணர் பூமியில் தோன்றிய போது பலர் அவரைக் கண்டனர். ஆனால் அவர்தான் முழுமுதற்கடவுள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஸ்ரிதம். மூடர்களும், அயோக்கியர்களும் கிருஷ்ணரை நேரடியாகக் கண்டனர் என்றபோதிலும், அவர்தான் முழுமுதற்கடவுள் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. பகவானை நேராகக் கண்ட பிறகும், துரதிர்ஷ்டசாலி ஒருவனால் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே பகவான் அல்லது கிருஷ்ணரைப் பற்றி நாம் நம்பத்தகுந்த வேத இலக்கியத்திலிருந்தோ அல்லது வேதத்தை முறையாக அறிந்தவர்களிடம் இருந்தோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன் பிரம்மா முழுமுதற்கடவுளைக் கண்டதில்லை என்றாலும், பகவான் ஸ்வேதத்வீபத்தில் இருக்கிறார் என்பதில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். இவ்வாறாக அங்கு செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பகவானிடம் அவர் பிரார்த்தனைகளைச் செய்தார். இவை சாதாரண, கற்பனையான பிரார்த்தனைகளல்ல. இப்பதத்தில் தைவீபிர் கீர்பி: எனும் சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், பிரார்த்தனைகள்...