ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும் அருளியவர்: ஸ்ரீல பக்திவினோத தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கலி யுக தர்மத்தைப் பரப்ப “ஸ்ரீ சைதன்யராக அவதரித்தார். அவரது சரிதத்தை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்” (Sri Caitanya Mahaprabhu: His Life and Precepts) என்ற தலைப்பில் ஸ்ரீல பக்திவினோத தாகூர், ஆங்கிலத்தில், ஆகஸ்ட் 20, 1896ல் சிறிய கட்டுரையாக வெளியிட்டார். அக்கட்டுரை ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட Teachings of Lord Caitanya (விரைவில் தமிழில் வெளிவரவிருக்கும் “ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள்”) என்னும் புத்தகத்தில் அறிமுகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள்… சைதன்யரின் தோற்றம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸகாப்த வருடம் 1407, பல்குன மாதத்தின் 23ம் நாளின் (கி.பி. 1486, பிப்ரவரி 18) மாலை வேளையில் சூரியன் மறைந்த சற்று நேரத்தில், சைதன்ய மஹாபிரபு நாதியா மாவட்டத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். சந்திர கிரஹணத்தின் போது அவர் பிறந்தார், இதுபோன்ற சூழ்நிலைகளில் வழக்கமாக நடைபெறுவதுபோல, அவர் பிறந்தபோதும் நாதியாவின் மக்கள் பாகீரதியில் நீர...