Skip to main content

Posts

Showing posts from January 23, 2021

மஹாஜனங்கள் யார்

மஹாஜனங்கள் யார் வழங்கியவர் : சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   ஸ்வயம்பூர்  நாரத: சம்பு:  குமார: கபிலோ  மனு: ப்ரஹ்லாதோ  ஜனகோ  பீஷ்மோ  பலிர்   வையாசகீர் வயம்  த்வாதஸயிதே   விஜானிமோ  தர்மம் பகவதம் பத:  குஹ்யம்  விசுத்தம்  துர்போதம்  யம்  ஞாத்வாம்ருதம்   அஸ்னுதே பிரம்ம தேவர், நாரதர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள், பகவான் கபிலர் (தேவஹூதியின் மகன்), சுயம்புவ மனு, பிரகலாத மகாராஜன், ஜனக மகாராஜன், பாட்டனார் பீஷ்மர், பலி மகாராஜன், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நான் ஆகிய பன்னிருவரும் உண்மையான சமயக் கோட்பாட்டை அறிந்தவர்களாவோம். அன்பிற்குரிய சேவகர்களே, பாகவத - தர்மம் அல்லது பரமபுருஷரிடம் அன்பு கொண்டு அவரிடம் சரணாகதியடைதல் எனப்படும் இந்த உன்னதமான சமயக் கோட்பாடு, ஜட இயற்கைக் குணங்களால் கறைப்படுத்தப்படாததாகும். இது மிகவும் இரகசியமானதும், சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வதற்குக் கடினமானதுமாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதை ஒருவன் புரிந்து கொண்டுவிட்டால், அவன் உடனே முக்தியடைந்து பரமபதத்திற்கு, பகவானின் இரா...

ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

  ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் (கீத கோவிந்த ம்) அருளியவர் : -  ஜெய தேவ கோஸ்வாமி  ************************************   பதம்   1 ப்ரளய - பயோதி - ஜலே த்ருதவான் அஸி வேதம் விஹித - வஹித்ர - சரித்ரம் அகேதம் கேசவ த்ருத - மீன - சரீர ஜெய ஜகதீச ஹரே மொழிபெயர்ப்பு ஓ கேசவா ! பிரபஞ்ச பிரபுவே ! மீன் உருவத்தை எடுத்த பகவான் ஹரியே , எல்லாப் புகழும் உமக்கே ! அழிவை உண்டாக்கும் . கொந்தளிப்பான கடலுக்குள்ளே மூழ்கியிருந்த வேதங்களைக் காப்பதற்காக , பெரிய மீன் உருவை ஒரு படகு போல மிக சுலபமாக ஏற்றுக் கொண்டீர்கள் . பதம் 2 க்ஷிதிர் இஹ விபுலதரே திஷ்டதி தவ ப்ருஷ்டே தரணி - தாரண - கிண - சக்ர - கரிஷ்டே கேசவ த்ருத - கூர்ம - சரீர ஜெய ஜகதீச ஹரே மொழிபெயர்ப்பு ஓ கேசவா ! பிரபஞ்சத்தின் பிரபுவே ! ஆமை உருவத்தை எடுத்த பகவான் ஹரியே ! எல்லா புகழும் உமக்கே ! இந்த அவதாரத்தில் பாற்கடலை கடைவதற்காக பிரம்மாண்டமான உமது ழுதுகை ஒரு அச்சு போல பயன்படுத்தி மந்தார மலையை தாங்கி நிற்கிறீர்கள் . பிரம்மாண்டமான மலையை சுமந்ததினால் முதுகில் பெர...