Skip to main content

Posts

Showing posts from July 19, 2023

பகவான் ஏன் ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார்

  பகவான் ஏன் ஒரு பௌதிக உருவினால் மூடப்பட்டவராக , அல்லது ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார் என்பதற்கு , அக்ரூரர் இங்கு இரு காரணங்களைக் குறிப்பிடுகிறார் . முதல் காரணம் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் லீலைகளை நிகழ்த்தும்பொழுது , அவரிடம் அன்புபூண்ட பக்தர்கள் அவரைத் தங்களது அன்புக் குழந்தையாகவோ அல்லது நண்பராகவோ அல்லது காதலராகவோ அல்லது வேறுமாதிரியாவோ நினைக்கின்றனர் . இந்த அன்புப் பரிமாற்றத்தின் பரவசத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை அவர்கள் கடவுளாக நினைப்பதில்லை . உதாரணமாக , கிருஷ்ணரிடமுள்ள அசாதாரணமான அன்பின் காரணத்தால் வனத்தில் அவருக்குத் தீங்கு ஏற்பட்டு விடும் என்று தாய் யாசோதை கவலைப்படுகிறாள் . அவள் இவ்வாறு உணர வேண்டுமென்பது பகவானின் விருப்பமாகும் . இது இங்கு நிகாம : எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது . பகவான் பௌதிகமானவராக காணப்படக் கூடும் என்பதற்கான இரண்டாவது காரணம் , அவி வேக : எனும் சொல்லால் சுட்டிக் காட்டப்படுகிறது : அறியாமையின் காரணத்தால் , பரமபுருஷரின் நிலையை ஒருவன் தவறாக புரிந்து கொள் ளக்கூடும் . ப...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனனும் துவாரகையைச் சேர்ந்த ஒரு பிராமணரின் இறந்த புத்திரிகளை மீட்டிய லீலை

  ஒருசமையம் துவாரகையில் ஒரு பிராமணரின் மனைவிக்குக் குழந்தை பிறந்து உடனே இறந்துவிட்டது . பிராமணரும் உயிரற்ற தன் மகனை மன்னர் மகாசேனரின் சபைக்கு எடுத்துச் சென்று , அரசரைப் பின்வருமாறு திட்டினார் . பீராமணர்களைப் பகைப்பவனும் , வஞ்சகனுமான இவன் தன் கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறியதால் தான் என் மகன் இறந்து போனான் . அந்த பிராமணரின் இந்த துர்பாக்கியமான நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது . பிராமணர் ஒவ்வொரு முறையும் தன் இறந்த குழந்தையை அரச சபைக்குக் கொண்டு வந்து போட்டு முன்போலவே அரசரைத் திட்டினார் . அம்மாதிரியே அவரது ஒன்பதாவது குழந்தையும் இறந்து போய் , அவரது புலம்பலைக் கேட்க நேர்ந்த அர்ஜுனன் பிராமணரே இனி உண்டாகும் உமது குழந்தையை நான் காப்பாற்றுவேன் . இதை நான் செய்யத் தவறினால் , அக்கினிப் பிரவேசம் செய்து அதனால் என் பாவத்தைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினார் . சில காலத்திற்க்குப் பிறகு அந்த பிராமணரின் மனைவி பத்தாவது குழந்தையை ஈன்றெடுக்கும் தறுவாயிலிருந்தாள் . அதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன் , பிரசவ அறைக்குச் சென...