Skip to main content

Posts

Showing posts from March 17, 2023

கிருஷ்ண பக்தி இயக்கம் ஏன் கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் பரிந்துரைக்கிறது

  சில நேரங்களில் இக்கிருஷ்ண பக்தி இயக்கம் பிற தேவ வழிபாட்டினை விலக்கி விட்டு கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் ஏன் பரிந்துரைக்கிறது என்று சிலர் கேட்கின்றனர் . உரிய பதில் இச்சுலோகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது . மரத்தில் அடிவேரில் நீர் வார்ப்பது பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் சான்று மிகவும் பொருத்தமுடையதாகும் . பகவத் கீதையில் (15.1) “ ஊர்த்வ மூலம் அத : ஸாகம் ” அதாவது இப்பிரபஞ்சம் கீழ்நோக்கி விரிவடைந்திருக்கிறது . அதன் வேராக மேலேயுள்ள முழுமுதற் கடவுள் விளங்குகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது . மேலும் பகவான் பகவத் கீதையில் (10.8) உறுதி செய்கிறார் ,” அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ :” என்று . இதன் பொருள் “ நானே அனைத்து ஆன்மீக மற்றும் பரு உலகங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றேன் ” என்பதாகும் . கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆணி வேராக இருக்கின்றார் ; அதனால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வது ( கிருஷ்ண ஸேவா ) என்பதற்குப் பொருள் அனைத்துத் தேவர்களுக்கும் தாமாகவே தொண்டு செய்து போன்றதாகும் . சில நேரம் கர்மம் மற்றும் ஞானத்தினை வெ...