நரசிம்ம அவதாரம் ஆதாரம் :- ஶ்ரீம த் பாகவதம் ஏழாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 5 அசுரத் தோழர்களுக்கு பிரகலாதரின் உபதேசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிரகலாதர் தமது பள்ளித் தோழர்களுக்குச் செய்த உபதேசத்தைப் பற்றி இந்த அத்தியாயம் விவரிக்கிறது . பிரகலாதர் , அசுரப் புத்திரர்களான தன் தோழர்களுடன் பேசும் பொழுது , ஒவ்வொரு ஜீவராசியும் , குறிப்பாக , மனிதர்கள் வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஆத்ம ஞானத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் . மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே , அவர்களுக்குப் பரமபுருஷர் ஒருவரே அனைவராலும் வழிபடத்தக்க மூர்த்தி என்பது கற்பிக்கப் பட வேண்டும் . பௌதிக சுகத்தில் ஒருவன் அதிக நாட்டம் கொள்ளக் கூடாது ; மாறாக , சுலபமாக அடையப்படக்கூடிய பௌதிக விஷயங்கள் கொண்டு ஒருவன் திருப்தியடைய வேண்டும் . ஒருவனது ஆயுள் மிகவும் குறுகியதாக உள்ளதால் , அவன் ஒவ்வொரு நொடியையும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே செலவி...