Skip to main content

Posts

Showing posts from October 3, 2020
 
 
 
 

நாம் உண்ணும் உணவு நமக்கு பாவ விளைவுகளை உண்டாகுமா ?

கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள், உணவை கிருஷ்ணருக்குப் படைத்தபின் உட்கொள்கின்றனர். இஃது உடலை ஆன்மீகத்தில் வளப்படுத்துகின்றது. இத்தகு செயலால், உடலின் பழைய பாவ விளைவுகள் அழிவது மட்டுமின்றி, ஜட இயற்கையின் எல்லாக் களங்கங்களிலிருந்தும் பூரண பாதுகாப்பு ஏற்படுகிறது. தொற்று வியாதி வேகமாக பரவும் போது, தடுப்பு மருந்து உட்கொள்வதால் ஒருவன் அதன் தாக்கத்திலிருந்து தப்ப முடிகிறது. அதுபோலவே பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்த உணவை நாம் உட்கொள்ளும் போது ஜட பாதிப்பை எதிர்ப்பதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. இதைப் பின்பற்றுபவர்கள் இறைவனின் பக்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே, கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட உணவை மட்டுமே உண்ணும் கிருஷ்ண பக்தர், ஆன்மீகத் தன்னுணர்வின் முன்னேற்றப் பாதையில் தடங்கல்களாக உள்ள (முந்தைய) ஜட பாதிப்புகளை வெற்றிகொள்ள முடியும். மறு பக்கத்தில், இவ்வாறு செய்யாதவன் தனது பாவச் செயல்களின் அளவை அதிகரித்துக் கொண்டே சென்று, இவற்றின் விளைவுகளை அனுபவிப்பதற்காக நாய், பன்றி போன்ற உடல்களை மறுபிறவியில் அடைகின்றான். இப்பௌதிக உலகம் முழுக்க முழுக்க களங்கங்கள் நிறைந்தது. பகவான் விஷ்ணுவின் பிரச...

வாசுதேவ விப்ரா

  வாசுதேவ விப்ரா பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நீலாசலிருந்து, தனது தென்னிந்திய யாத்திரை போகும் வழியில், புனித தலமான கூர்ம ஸ்தலத்தில் ஒரு நாள் தங்கி, அங்கு நாள் முழுவதும் சங்கீர்த்தனம் செய்து, பக்தி பரவசத்தில் நடனமாடினார். அவருடன் இணைந்து அந்த பகுதி மக்களும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில், உற்சாகத்துடன் பங்கு கொண்டனர். கூர்ம ஸ்தலத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாசுதேவன் என்ற பிராமணர் வசித்து வந்தார். அவர் மிகச் சிறந்த பக்தர். ஆனால், அவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இருந்தும், தன்னடக்கம் , பணிவான குணம் போன்ற நற்குணங்கள் நிறைந்த பக்தராக இருந்தார். ஒரு நாள் இரவு பகவானின் அவதாரமான ஒரு சன்யாசி புனித நாமங்களைப் பாடி கொண்டு ஒவ்வொரு கிராமும் நகரமுமாய் கடந்து சென்று கொண்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட வாசுதேவர், கண நேரம் கூட தாமதிக்காமல், உடனே அந்த மஹா புருஷரை காண கூர்ம ஸ்தலத்தை நோக்கி புறப்பட்டார். தன் நிலையை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பகவானின் மேலுள்ள பக்தி ஈர்ப்பினாலும், மிக உறுதியான நம்பிக்கையுடன், பகவானை காண விரைந்தார். ஆனால் அவரது உடல் ஒத்துழைக்க மறுத்தது. புண்களில் இருந்து இரத்த...