Skip to main content

Posts

Showing posts from July 17, 2023

பகவான் அனைவருடைய இதயத்திலும் சாட்சியாக அமர்ந்திருக்கிறார்

  பகவான் அனைவருடைய இதயத்திலும் சாட்சியாக அமர்ந்திருக்கிறார் என்பதை பகவத்கீதை உறுதி செய்கிறது . இதனால் அவரே உத்தரவிடும் பரம வழிகாட்டியாவார் . செயலின் பலன்களை அனுபவிப்பவர் வழிகாட்டியல்ல . ஏனெனில் பகவானின் உத்தரவு இல்லாமல் ஒருவரும் அனுபவிக்க முடியாது . உதாரணமாக , குடிப் பழக்கத்திற்கு அடிமையானவன் , தடை விதிக்கப்பட்ட ஒரிடத்தில் குடிப்பதற்கு . நிர்வாகியிடம் மனு செய்கிறான் , நிர்வாகியும் அவனுடைய நிலையை கருத்திற்கொண்டு , ஒரு குறிப்பிட்ட அளவு மதுவை மட்டுமே அருந்த வேண்டும் என்ற விதியுடன் அவனை அனுமதிக்கிறார் . அதைப் போலவே , ஜட உலகம் முழுவதும் குடிப்பழக்கமுள்ளவர்களால் நிரப்ப்பட்டுள்ளது . அதாவது ஒவ்வொரு ஜீவராசிக்கும் அவனுடைய மனதில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது . தங்களுடைய ஆசைகள் நிறைவேற வேண்டுமென்று ஒவ்வொருவரும் தீவிர விருப்பம் கொண்டுள்ளனர் . தந்தை மகனிடம் அன்பு கொண்டிருப்பதைப் போல் , சர்வல்லமை பொருந்திய பகவான் , ஜீவராசிகளிடம் உள்ள அன்பினால் அவர்களின் குழந்தைத்தனமான திருப்திக்காக அவர்களுடைய ஆசைகளை கொண்டுள்ள ஜீவரா...

அனைத்தும் இறைவனைத் தவிர வேறில்லை என்றால் ஏன் அவரை பிரத்யேகமாக வணங்க வேண்டும்?

  அனைத்தும் பகவானாகவே இருப்பதால் , அவரை வழிபடுகதில் பயனில்லை என்று அருவவாதிகள் வாதிக்கின்றனர் . ஆனால் பகவானின் தேக உறுப்புக்களிலிருந்து பிறந்துள்ள பகுதிப் பொருட்களை உபயோகித்து , நன்றி உணர்வுடன் உருவவாதிகள் பகவானை வழிபடுகின்றனர் . பழங்களும் , பூக்களும் பூமித்தாயின் தேகத்திலிருந்து கிடைக்கின்றன . இருப்பினும் அறிவுள்ள பக்தன் பூமியிலிருந்து பிறந்த பொருட்களாலேயே பூமித்தாயை வழிபடுகிறான் . இதைப் போலவே , கங்கைத் தாய் கங்கை நீராலேயே வழிபாடு செய்யப்படுகிறாள் . இருப்பினும் அத்தகைய வழிபாட்டின் பலனை , வழிபடுபவன் அனுபவிக்கிறான் . பகவானின் உடலுறுப்புக்களிலிருந்து பிறந்த பொருட்களாலேயே அவரது வழிபாடும் நடத்தப்படுகிறது . இருப்பினும் பகவானின் ஒரு பாகமாக உள்ள வழிபாடு செய்பவன் , பகவானிடம் செய்யும் பக்தித் தொண்டின் பலனை அடைகிறான் . நானே பகவான் என்று அருவவாதி தப்பாக முடிவு செய்யும் வேளையில் , உருவவாதி , பகவானிலிருந்து எதுவுமே வேறானதல்ல என்பதைப் பூரணமாக உணர்ந்து , பக்தித் தொண்டால் பகவானை வழிபடுகிறான் . எனவே எதுவுமே தனக்குச் சொந்தமானதன...