Skip to main content

Posts

Showing posts from December 19, 2021

வருத்தம் என்பது இழப்பிற்காக, ஆசை என்பது ஒன்றை அடைவதற்காக

  உண்மையாக ஆன்மீக உணர்வில் நிலைபெறும் பொழுது நம்முடைய குணங்களில் அல்லது அறிகுறிகளில் மாற்றங்கள் தோன்றும் . அந்த அறிகுறிகள் யாவை ? ஒருவன் தன்னுடைய ஆன்மீக உணர்வில் நிலை பெற்றுவிட்ட பிறகு , அவனுக்கென்று ஆசையோ , வருத்தமோ இருக்காது . வருத்தம் என்பது இழப்பிற்காக , ஆசை என்பது ஒன்றை அடைவதற்காக . இரண்டு விதமான வியாதிகள் இந்த பௌதிக உலகை விவரிக்கிறது : நம்மிடம் எது இல்லையோ அதற்காக நாம் ஆசைப்படுவது , “ எனக்கு இந்தப் பொருட்கள் கிடைத்தால் நான் இன்பமாக இருப்பேன் . என்னிடம் பணம் இல்லை , அதனால் எனக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் கிடைத்தால் , எனக்கு இன்பமாக இருக்கும் ”. நம்மிடம் பத்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் . எப்படியோ அது தொலைந்துவிட்டது . அப்பொழுது , “ அய்யய்யோ பணத்தை தொலைத்துவிட்டேனே ” என்று அழுகிறோம் . நாம் பணம் சம்பாதிப்பதற்காக ஆசைப்படுவது என்பது ஒரு விதமான துன்பம் . அதே போல் தான் இழப்பிற்காக வருத்தப்படுவதும் ஒருவிதமான துன்பம் . ஆனால் நாம் பிரம்ம பூத நிலையில் இருக்கும் பொழுதோ ஆசைப்படுவ...

கிருஷ்ணர் இன்பத்தின் இருப்பிடம்

  கிருஷ்ண - இது ஒரு உன்னதமான சப்தம். கிருஷ்ண என்றால் மிக உயர்ந்த ஆனந்தம் அல்லது இன்பம் என்று பொருள். எல்லா உயிரினங்களும் இன்பத்தைத் தேடி அலைகின்றன. ஆனால் பௌதிக நோக்குள்ள இந்த வாழ்க்கையில், நாம் இன்பத்தை பூர்த்தி செய்து கொள்ள நினைக்கும் ஒவ்வொரு அடியிலும் குழப்பத்தையே சந்திக்கிறோம். இன்பத்தை அனுபவிப்பதற்கான உண்மையான தகவல் நம்மிடம் இல்லாததே இதற்கு காரணம். ஒருவன் உண்மையான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அவன், தான் இந்த உடல் அல்ல, தான் ஒரு உணர்வு என்பதை உணர வேண்டும். உணர்வு என்பது கூட சரியாகாது. ஏனென்றால் உணர்வே நம்முடைய உண்மை நிலைக்கான அறிகுறி. அதாவது நான் ஒரு ஆத்மா, நான் தற்பொழுது இந்த பௌதிக உடலுடன் இணைந்துள்ளேன். தற்கால பௌதிக விஞ்ஞானிகள் இந்த பௌதிக விஷயத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால்தான் அவர்கள் சில சமயங்களில் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்வதில் திசை திருப்பப்படுகிறார்கள். ஆனால் தூய ஆத்மா என்பது உண்மையே. இதை ஒவ்வொருவரும் தமது உணர்வின் மூலம் உணரலாம். தூய உணர்வே தூய ஆத்மாவின் அறிகுறி என்பதை எந்தக் குழந்தையும் புரிந்து கொள்ளும். பகவத் கீதையிலிரு...