Skip to main content

Posts

Showing posts from August 10, 2023

வேத விதிகளுக்கேற்பவே செயற்பட வேண்டியவர் யார் ?

தாவத் கர்மாணி குர்வீத ந நிர்வித்யேத யாவதா மத்-கதா-ஸ்ரவணாதௌ வா ஸ்ரத்தா யாவன் ந ஜாயதே மொழிபெயர்ப்பு எதுவரையில் கர்மத்தில் திருப்தியடையவில்லையோ, எதுவரையில் என் கதை முதலியவற்றைக் கொண்ட பக்தித்தொண்டில் சிரத்தை உண்டாகவில்லையோ அதுவரையில் ஒருவன் வேத விதிகளுக்கேற்பவே செயற்பட வேண்டும். பொருளுரை தூய பக்தர்களுடன் சகவாசம் கொண்டு பகவத் தொண்டில் முழு நேர ஈடுபாடு கொள்வதன் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் திட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தாலொழிய ஒருவன் சாதாரண வேதக் கோட்பாடுகளையும், கடமைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. இதை பகவானே பின்வருமாறு குறிப்பிடுகிறார். ஸ்ருதி-ஸ்ம்ருதி மமைவாக்ஞே யஸ் தே உல்லங்ய வர்ததே ஆக்ஞா-ச்சேதீ மம த்வேஷீ மத்-பக்தோ ’பி ந வைஷ்ணவ: “சுருதி மற்றும் ஸ்மிருதி சாஸ்திரங்கள் எனது கட்டளைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டளைகளை மீறுபவன் எனது விருப்பத்தை மீறி என்னை எதிர்ப்பவனாகிறான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஒருவன் தன்னை எனது பக்தன் என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் அவன் ஒரு வைஷ்ணவனல்ல.” பகவானைப் பற்றிக் கேட்பதிலும், பாடுவதிலும் திட நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாத...

பகவானின் அன்புத் தொண்டில் உபயோகிக்கப்படுகின்ற பொருட்கள் ஆன்மீகமானவையாகும்

  எதை ஒருவன் சுயப் புலன் நுகர்வுக்கு உபயோகிக்க எண்ணுகிறானோ அதுவே ஜட சொத்து எனப்படுகிறது. ஆனால் பகவானின் அன்புத் தொண்டில் உபயோகிக்கப்படுகின்ற பொருட்கள் ஆன்மீகமானவையாகும். ஒருவன் தன் ஜட சொத்துக்களையெல்லாம் பகவத் தொண்டில் முழுமையாக உபயோகிப்பதன் மூலம் அவற்றிடமுள்ள பற்றை விட வேண்டும். சொகுசான ஒரு மாளிகையைப் பெற்றிருப்பவன் அதில் பகவானின் திருவிக்கிரகத்தை ஸ்தாபித்து, கிருஷ்ண உணர்வைப் பரப்ப அடிக்கடி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதுபோலவே, பகவானுக்கு ஆலயம் கட்டவும், பரமபுருஷரைப் பற்றி விளக்கும் விஞ்ஞானப்பூர்வமான இலட்சியங்களை அச்சிடவும் செல்வம் உபயோகிக்கப்பட வேண்டும். தன் சொத்துக்களை பகவத் தொண்டில் உபயோகிக்காமல் குருட்டுத்தனமாக அவற்றைத் துறப்பவன், அனைத்தும் பரமபுருஷருக்குச் சொந்தம் என்பதைப் புரிந்து கொள்ளாதவனாவான். இத்தகைய குருட்டுத்தனமான துறவு, “இந்த சொத்து என்னுடையதாக இருக்கலாம், ஆனால் இது எனக்கு வேண்டாம்” என்ற பௌதிக எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். உண்மையில் அனைத்தும் பகவானுக்குச் சொந்தமானதே; இதை அறிந்துள்ள ஒருவன் இவ்வுலகிலுள்ள பொருட்களை அனுபவிக்கவோ அல்லது விலக்கவோ முயல்வதில...

பரம ஏகாதசி

புருஷோத்தம அதிக மாதத்தின் தேய்பிறையில் தோன்றக்கூடிய பரம ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பகவான் கிருஷ்ணர் மகாராஜா யுதிஸ்டிரருக்கு விளக்கிக் கூறினார். மகாராஜா யுதிஸ்டிரர் வினவினார். ஓ! எனது பகவானே, புருஷோத்தம அதிக மாதத்தில் தேய்பிறையில் தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயரையும் அதை கடைபிடிக்கும் முறையினைப் பற்றியும் எனக்குக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார், ஓ! மன்னா! இந்த ஏகாதசியின் பெயர் பரம ஏகாதசி இந்த மங்களகரமான ஏகாதசி ஒருவரின் பாவ விளைவுகள் அனைத்தையும் அழித்துவிடும் மற்றும் ஒருவருக்கு ஜட இன்பத்துடன் முத்தியையும் கொடுக்கும். ஏற்கனவே நான் உன்னிடம் விளக்கியுள்ளபடியே இந்த ஏகாதசியையும் அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து இருப்புகளுக்கும் ஆதாரமான முழு முதற்கடவுளை பூஜிக்க வேண்டும். கம்பில்ய நகரத்தில் முனிவர்கள் கூறிய ஒரு சுவாரஸ்யமான கதையை கூறுகிறேன் கேள். கம்பில்ய நகரில் தெய்வ பக்தி மிகுந்த ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் பெயர் சுமேதா, அவருக்கு பவித்ரா என்று ஒரு கற்புள்ள மனைவி இருந்தாள். ஆனால் சில பாவவிளைவுகளால் அந்த அந்தணர் மிகவும் ஏழையானார். பிச்சை எடுத்தும் வாழ்க்கை நடத்த முடியவில்லை. அவருக்கு...