சீதை இராவணனின் மகளா? வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁 சீதை இராவணனின் மகள் என்றும் அதனால்தான் அவன் சீதையைக் கொண்டு சென்றான் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆம், சரியாகத்தான் படித்துள்ளீர். இந்தக் கருத்தும் சமூகத்தில் ஆங்காங்கே உலாவுகிறது. பரவலான ஐயமாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் இக்கேள்வி எழுப்பப்படுகிறது. இதைச் சற்று விளக்குவோம். இதிகாசம் என்றால் என்ன? 🍁🍁🍁🍁🍁🍁 இதி–ஹ–ஆஸம் = இதிஹாசம், இதி–ஆஸம் என்பதற்கு “இவ்வாறு நடந்தது” என்று பொருள், ஹ என்பதற்கு “உறுதியாக” என்பது பொருள். வரலாற்று சம்பவத்தில் எந்தவொரு பொய்யும் கலக்காமல் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டதே இதிகாசமாகும். பாரதத்தின் இருவேறு இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணம் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டு உலகெங்கும் பரப்பப்பட்டது. சமண இராமாயணத்தின் பிழைகள் 🍁🍁🍁🍁🍁🍁 பன்னெடுங் காலமாக இருந்து வந்த வால்மீகி இராமாயணம், வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்களால் பலவகை இடைச்செருகலுடன் கலி யுகத்தில் பல்வேறு மொழிகளில் இயற்றப்பட்டது. அவற்றில் சமணர்களால் எழுதப்பட்ட இராமாயணங்கள் பற்பல தவறான மாற்றுக் கருத்துகளுடனும் க...