Skip to main content

Posts

Showing posts from February 26, 2025

சிவபெருமானின் நித்ய ஸ்வரூபம் "கோபீஸ்வர மகாதேவர்".

"ஒரு கோபியாக மாறி, தானும் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலையில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு சிவபெருமான் மிகக் கடும் தவமிருந்தார். அதைக் கண்ட யோக மாயையான பெளர்ணமாசி மிகவும் மகிழ்ந்து. அவர் முன்னால் தோன்றினாள். சிவபெருமானின் வேண்டுதலை அறிந்து அவரைப் பிரம்மகுண்டம் என்ற புனித தீர்த்தத்தில் முக்கினாள்.அவ்வளவுதான்! சிவபெருமான் ஒரு அழகான இளமையான கோபி ஆனார். அவர் ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களுடன் நடத்திய ரஸ லீலா நடந்து கொண்டிருந்த இடத்தை அடைந்து சற்று தூரத்தில் மறைந்து நின்று ரஸ லீலாவைப் பார்க்க முயன்றார். "உடனடியாக ஸ்ரீகிருஷ்ணரும் மற்ற கோபியர்களும் தங்கள் மன மகிழ்ச்சியில் பெரும் வித்தியாசத்தை உணர்ந்தனர். அவர்களால் மகிழ்ச்சியுடன் ஆட முடியாமல் அவர்கள் தங்களுக்குள்ளேயே. "ஏன் இன்று வழக்கம்போல் மகிழ்ச்சியே இல்லை?" என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டு, காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதற்காக அக்கம், பக்கம் எல்லாம் தேடிப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் கோபியாக நின்று கொண்டிருந்த சிவபெருமானைக் கண்டு, 'நீ யார்? உன் பெயர் என்ன? யார் உன் தாய் தந்தையர்கள்? உன் கணவனின் பெயர் ...

சிவம் என்றால் “மங்கலம்”.

  யத் த்வி - அக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம் ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆஸு ஹந்தி தத் பவித்ர - கீர்திம் தம் அலங்க்ய - ஸாஸனம் பவான் அஹோ த்வேஷ்டி ஸிவம் ஸிவதேர: மொழிபெயர்ப்பு சதீ தொடர்ந்து கூறினாள்: எனது அன்பான தந்தையே, நீர் சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டதின் மூலம் மிகப் பெரியத் தவரைச் செய்திருக்கிறீர். ‘சி’ மற்றும் ‘வ’ என்னும் இரண்டெழுத்துக்களுடைய சிவ என்னும் நாமம் ஒருவரது எல்லாப் பாவங்களையும் நீக்குகிறது. அவரது ஆணைகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. சிவபெருமான் எப்போதும் தூய்மையானவர். அவர் மீது உம்மைத் தவிர வேறு யாராலும் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியாது. பொருளுரை சிவபெருமான் பௌதீக உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் மிகச் சிறந்த மகாத்மாவாக விளங்குகிறார். உடலோடு ஆத்மாவை அடையாளம் காணும் மனிதர்களுக்கு அவரத நாமம் மிகவும் மங்கலமானதாகும். இதுபோன்ற மனிதர்கள் சிவபெருமானைச் சரண் புகுந்தால், படிப்படியாகத் தாம் இந்தப் பரு உடல் அல்ல, ஆத்மா என்று உணர்ந்து கொள்வர். சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். உடலினுள் இருக்கும் ஆத்மா மங்கலகரமானதாகும். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி:’ “நான் பிரம்மம்”. இவ்வுணர்தலே ம...