அதிகாலை பொழுதில் இமயமலைப் பகுதியில் உள்ள பத்ரிகாஸ்ரமத்தில் சூரியன் உதிக்கும் நேரம். அவ்வேளையில் வியாச முனிவர் சரஸ்வதி நதியில் குளித்து தனது நித்யானுஷ்டானங்களை முறையாக செய்த பின்னர், தனியாக அமர்ந்து தியானம் செய்தார். முக்காலமும் அறிந்த மகாமுனியான அவர் ஞான திருஷ்டியில் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவரால் பார்க்க முடிந்தது. அப்போது துவாபர யுகத்தின் முடிவு காலம் . வெகுவிரைவில் கலியுகம் நெருங்கிக் கொண்டிருப்பதையும், கலியுகத்தில் பிறக்கப்போகும் மக்களிடம் பல்வேறு குறைகளைக் கண்டார். மாமுனிவர் வியாசர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சத்யாவேஷ அவதாரம். கலியுக மக்களுக்கு நன்மை செய்ய நினைத்த அவர் "கலியுகத்தின் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், அதிர்ஷ்டமற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர் என்பதை கண்ட அவர், மனிதகுலத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகள் மற்றும் நல்வழிகள் வேதங்களில் மட்டுமே சிறப்பாக உள்ளது, ஆதலால், வேதங்களின் அறிவை மிகவும் எளிமையான வடிவத்தில் அ...