காஞ்சி அபிஜன் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்பு ஒரு காலத்தில் புருஷோத்தம தேவர் என்ற ஓர் அரசர் இருந்தார். இவர் கோங்கா வம்சத்தைச் சேர்ந்தவர். ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தவர். இவர் ஜெகந்நாதரின் பரமபக்தர். ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்ரையின் போது இந்த அரசர் பகவான் ஜெகந்நாதரின் திருப்திக்காக, ரதத்திற்கு முன் தெருவைக் கூட்டுவார். அவர் பகவானை எல்லாவற்றுக்கும் உரிமையாளராகவும், அந்த நாட்டின் உண்மையான அரசனாகவும் நினைத்து, தன்னை பகவானின் மிகவும் தாழ்ந்த சேவகனாக எண்ணிக் கொண்டார். ஒரு சமயம் அரசர் தென்னாட்டில் காஞ்சி நகரத்திற்கு விஜயம் செய்தார். அவ்விடத்தில் தனது கூடாரத்தை, தலை நகரத்திலுள்ள மிகவும் ரம்மியமான ஓர் தோட்டத்தில் அமைத்தார். அங்கே, மன்னர் புருஷோத்தம தேவர் காஞ்சி இளவரசி பத்மாவதியை சந்தித்தார் இருவர்கிடையில் கருத்து ஒருமித்து காதலிக்கலானார்கள். இவர்களது விருப்பம் அறிந்த காஞ்சி அரசன் , மனமகிழ்ந்து மன்னர் புருஷோத்தமரை அரண்மனைக்கு அழைத்து விவாகம் குறித்து பேசி தீர்மானம் செய்தார்கள். மன்னர் புருஷோத்தம தேவரும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் . பின்னர் ஒரிசாவுக்குத் திரு...