Skip to main content

Posts

Showing posts from August 8, 2021

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நித்யமாக வாசம் புரியும் "கோலோக விருந்தாவனம்"

  ஹரிவம்ஷ ( விஷ்ணு பர்வ அத்தியாயம் 19) எனும் சாஸ்திரத்தில் கோலோக விருந்தாவனத்தை பற்றி பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது .     கிருஷ்ணர் கோவர்த்தன மலையை உயர்த்திய பின்னர் சொர்க்க லோகத்தின் மன்னனான இந்திரன் அவரிடம் சரணடைந்தான் . அப்போது மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் பறவைகள் பறக்கக்கூடிய ஆகாயம் உள்ளது என்று இந்திரன் கூறினான் . அந்த ஆகாயத்திற்கு மேல் சூரியனும் அதன் சுழற்சிக்கான பாதையும் உள்ளது இது ஸ்வர்க்க லோகத்திற்கான நுழைவாயிலாகும் . ஸ்வர்க லோகங்களுக்கு மேலே பிரம்மலோகம் வரை உள்ள இதர லோகங்களில் ஆன்மீக அறிவில் முன்னேற்றம் பெற்றவர்கள் வசிக்கின்றனர் . பிரம்மலோகம் வரையுள்ள லோகங்கள் பௌதிக உலகின் ( தேவி தாமத்தின் ) பகுதிகளாகும் இந்த உலகம் துர்கா தேவியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இது தேவி தாமம் என்று அறியப்படுகிறது .     தேவி தாமத்திற்கு மேலே சிவபெருமான் தமது மனைவியான உமாவுடன் வசிக்கும் லோகம் உள்ளது . ஆன்மீக ஞானத்தில் பிரகாசமாக இருப்பவர்களும் பௌதீக களங்கங்...