Skip to main content

Posts

Showing posts from May 25, 2023

விஷ்ணு ரூபமே தியானத்தின் இறுதியான இலட்சியம்

  தத்ரைக்காவயவம் த்யாயேத் அவ்யுச்சினனேன சேதஸா மனோ நிர்விஷயம் யுக்த்வா தத : கிஞ்சன ந ஸ்மரேத் பதம் தத் பரமம் விஷ்ணோர் மனோ யத்ர ப்ரஸீததி மொழிபெயர்ப்பு அதன் பிறகு , விஷ்ணுவின் அங்கங்களின் மீது ஒவ்வொன்றாக , முழு உடலைப் பற்றிய கருத்திலிருந்து விலகி விடாமல் நீர் தியானிக்க வேண்டும் . இவ்வாறாக , அனைத்துப் புலன் பொருட்களிலிருந்தும் மனம் விடுபடுகிறது . வேறெதைப் பற்றியும் , நினைக்கக் கூடாது . பரம புருஷ பகவானாகிய விஷ்ணுவே பரம சத்தியமாக இருப்பதால் , அவரில் மட்டுமே மனதால் பூரணமாக ஒத்துப்போக முடியும் . பொருளுரை விஷ்ணுவின் புறச் சக்தியால் தடுமாற்றத்திற்கு உள்ளாகும் மூடர்கள் , இன்பத்தைத் தேடி அலைவதன் இறுதி இலட்சியம் முழு முதற்கடவுளாகிய ஸ்ரீ விஷ்ணுவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதுதான் என்பதை அறிவதில்லை . விஷ்ணு - தத்துவம் எனப்படுவது முழுமுதற் கடவுளின் எண்ணிலடங்காத உன்னத உருவங்களின் விரிவங்கங்களாகும் . மேலும் விஷ்ணு - தத்துவத்தின் மூல உருவமாக இருப்பவர் எல்லாக் காரணங்களுக்கும் பரம காரணமான கோவிந்தன் அல்லது ஸ்ரீகிருஷ்...

நம்பிக்கை யற்ற அபக்தர்கள் தெளிவான இவ்விஷயத்திணைக் காண்பதில்லை.

  த்வொ பூத ஸர்கௌ லோகே 'ஸ்மின் தைவ ஆஸுர ஏவ ச விஷ்ணு பக்த ஸ்ம்ருதோ தைவ ஆஸுரஸ் தத் விபர்யய படைக்கப்பட்ட உலகில் இருதரப்பட்ட மனிதர்கள் உள்ளனர்:அசுர குணம் கொண்டவர்கள்.தேவ குணம் கொண்டவர்கள்.பகவான் விஷ்ணுவின் பக்தர்கள் தேவ குணம் கொண்டவர்கள் அதற்கு எதிர்நிலையில் இருப்பவர்கள் அசுரர்கள் எனப்படுகின்றனர். (ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.91) அஸுர ஸ்வபாவே கிரிஷ்ணே கபு நாஹி ஜானே லுகாஇதே நரே க்ரிஷ்ண பக்த ஜன ஸ்தானே அசுர சுபாவம் கொண்டவர்களால் கிருஷ்ணரை ஒருபோதும் அறிய முடியாது ஆனால் தமது தூய பக்தர்களிடமிருந்து கிருஷ்ணரால் தம்மை மறைத்துக்கொள்ளவும் முடியாது. (ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.90) தேகியா நா தேகே ஜத அபக்தேர கண உலூகே நாதேகே ஜேன ஸூர்ஜேர கிரண இருப்பினும், ஆந்தைகள் சூரியக் கதிர்களைப் பார்க்காமல் இருப்பதைப் போல நம்பிக்கை யற்ற அபக்தர்கள் தெளிவான இவ்விஷயத்திணைக் காண்பதில்லை. (ஶ்ரீ சைதன்ய சரிதாமிருதம் ஆதிலீலை 3.86) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற...

புண்ணியச் செயல்களை திருநாம கீர்த்தனத்துடன் ஒருபோதும் ஒப்பிட கூடாது.

  புண்ணியச் செயல்களை திருநாம கீர்த்தனத்துடன் ஒருபோதும் ஒப்பிட கூடாது. கோடி அஷ்வமேத ஏக க்ரிஷ்ண நாம ஸம ஜேஇ கஹ ஸே பாஷண்டீ தண்டே தாரே ஜம கோடி அஸ்வமேத யாகங்களை செய்வது கிருஷ்ணருடைய நாமத்தை ஒருமுறை உச்சரிப்பதற்கு சமமானது என்று யாரேனும் கூறினால், அவன் நிச்யமாக நாஸ்திகனாவான்,அவன் எமராஜரால் தண்டிக்கப்படப் போவது உறுதி வேத இலக்கியங்கள் கூறுவது யாதெனில். கோ கோடி தானம் க்ரஹணே ககஸ்ய ப்ரயாக கங்கோ தக கல்ப வாஸ: யஜ்ஞாயுதம் மேரு ஸுவர்ண தானம் கோவிந்த கீர்தேர் ந ஸமம்'ஷதாம்ஷை "ஒருவன் சூரிய கிரகணத்தின் போது ஒரு கோடி பசுக்களை தானமளித்தாலும்,பல கோடி ஆண்டுகள் கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில். வாழ்ந்தாலும் தங்க மலையிணை பிராமணர்களுக்கு தானமளித்தாலும் அவன் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தால் அடையப்படும் பலனில் நூற்றில் ஒரு பங்குகூட அடைவதில்லை.. வேறுவிதமாக கூறினால் ஹரே கிருஷ்ண உச்சாடனத்தினை ஏதோவொரு புண்ணிய. செயலாக ஏற்பவன் நிச்சயமாக முற்றிலும் தவறாக வழிநடதப்பட்டுள்ளான். ஹரே கிருஷ்ண கீர்த்தனை என்பது நிச்சயமாக ஒரு புண்ணிய செயலே.ஆயினும் உண்மை என்னவென்றால் கிருஷ்ணரும் அவரது திருநாமும் தெய்வீகமானவையாக இருப்பத...