Skip to main content

Posts

Showing posts from August 23, 2025

ஸ்ரீராதாஷ்டமி

  பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமித் திருநாள்  ‘கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாள்  ‘ஸ்ரீராதாஷ்டமி  என்று அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதிராதா ராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விருப்பம் கொண்டார். எனவே கிருஷ்ணர் பிறந்த ஸ்தலத்திற்கு அருகே ஓடிய யமுனை நதியில் ‘தங்கத் தாமரையில் ஒரு பெண் குழந்தையாக அவதரித்தார். அந்நகர மன்னர் ‘விருஷபானு என்பவர் யமுனைக்கு நீராடச் சென்ற போது ஜொலிக்கும் அந்தத் தாமரையைக் கண்டு அதிசயத்தார். பிறகு அருகே சென்ற போது அத் தாமரையில் இருந்த தெய்வீகமான பெண் குழந்தையை பார்த்ததும் தன் அரண்மனைக்கு கொண்டு வந்தார். பெரியாழ்வாருக்கு,  தாயார் ஆண்டாள் தேவி தெய்வப் புதல்வியாக பிறந்தது போல் இந்த மன்னருக்கும் இங்ஙனம் ஸ்ரீமதி ராதாரணி அருள்புரிந்தார். ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருஸ்தலமான ‘ராவல் கிராமத்தில் தவழும் குழந்தையாக வீற்றிருக்கிறார்.   ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த மதுராவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ராவல் கிராமம். சாஸ்திரங்கள், உயர்ந்த ஆச்சார்யர்...

""ஸ்ரீமதி ராதாராணியின் முக்கியமான இருபத்தைந்து தெய்வீக குணங்கள்

  அத, வ்ருந்தா, வனேஷ்வர்யா: கீர்த்யந்தே ப்ரவரா குணா மது ரேயம் நவ - வயாஷ் சலாபாங்கோஜ்ஜ்வல-ஸ்மிதா சாரு-ஸௌபாக்ய-ரேகாட்டியா கந்தோன்மாதி,த-மாதவா   ஸங்கீத- ப்ரஸராபிஜ்ஞா ரம்ய-வாங் நர்ம- பண்டி,தா வினீதா கருணா - பூர்ணா விதக்தா, பாடவான்விதா   லஜ்ஜா - ஷீலா ஸு-மர்யாதா தைர்ய-காம்பீர்ய-ஷாலினீ ஸு- விலாஸா மஹாபாவ- பரமோத்கர்ஷ- தர்ஷிணீ   கோகுல-ப்ரேம - வஸதிர் ஜகச்-ச்ரேணீ- லஸத்- யஷா: குர்வ் -அர்பித-குரு-ஸ்நேஹா ஸகீ,-ப்ரணயிதா- வஷா   க்ருஷ்ண- ப்ரியாவலீ- முக்யா ஸந்ததாஷ்ரவ- கேஷவா பஹுனா கிம் குணாஸ் தஸ்யா: ஸங்க்யாதீதா ஹரேர் இவ (1) மதுரா - மிகவும் இனிமையானவள் ,  (2) நவ - வயா - என்றும் இளமையானவள் , (3) சல - அபாங்கா - சஞ்சலமான கண்களைக் கொண்டவள் ,  (4) உஜ்ஜ்வல - ஸ்மிதா - பிரகாசமாகச் சிரிப்பவள் ,  (5) சாரு - ஸௌபாக்ய - ரேக - ஆட்யா - மிகவும் அழகான மங்கல ரேகைகளை உடையவள் ,  (6) கந்த உன்மாதி த - மாதவா - தனது திருமேனியின் நறுமணத்தினால் கிருஷ்ணரை மகிழ்விப்பவள் .  (7) ஸங்கீத ப்ரஸர - அபிஜ்ஞா - சங்கீதத்தை விரிவாக அறி...