Skip to main content

Posts

Showing posts from December 7, 2025

பாரத வர்ஷம் - புண்ணிய பூமி

       பாரத - வர்ஷம் என்று அழைக்கப்படும் இந்தியாவில், பக்தித்தொண்டு செய்வதற்கு ஏராளமான வசதிகள் இருக்கின்றன. பாரத - வர்ஷத்தில் அனைத்து ஆச்சாரியர்களும் தங்கள் அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்கின்றனர். ஆன்மீக வாழ்வில் எவ்வாறு வளர்ச்சி பெறுவது, பகவானது பக்தித் தொண்டில் எவ்வாறு நிலைபெறுவது என்பதை பாரத - வர்ஷத்தில் உள்ள மக்களுக்கு உபதேசிப்பதற்காக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனிப்பட்ட முறையில் அங்கு எழுந்தருளினார். பக்தித் தொண்டின் வழிமுறைகளை மிகவும் எளிதில் அறிந்து கொள்வதற்கும், அதனை மேற்கொள்வதின் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும் பாரத - வர்ஷம் விசேஷத் தன்மை வாய்ந்த நிலமாகும். ஒருவன் பக்தித் தொண்டில் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொண்டு, பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பக்தித் தொண்டினை உபதேசிப்பானென்றால், உலகம் உண்மையில் நலம்பெறும். இவ்வுண்மைகள் சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி 9.41) மேலும் விளக்கப்படுகின்றன: பாரத - பூமிதே ஹைல மனுஷ்ய - ஜன்ம யார ஜன்ம ஸார்தக கரி’ கர பர - உபகார      “இந்திய (பாரத - வர்ஷம்) நிலப்பகுதியில் மனிதனாகப் பிறந்திருக்கும் ஒருவன் தனத...