Skip to main content

Posts

Showing posts from January 6, 2024

அலெக்சாண்டரை வென்ற சாது

  சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, மிகப்பெரும் சகாப்தத்தை படைத்த கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் தனது ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவின் கிரேக்க நாடு முதல் தொடங்கி ஆசியக் கண்டத்தின் இந்திய எல்லை துவக்கம் வரை உள்ள ஏராளமான ராஜ்யங்களை தன் கையகப்படுத்தியிருந்தார். இதனாலேயே இவர் அலெக்சாண்டர் தி கிரேட் என்று புகழப்பட்டார். உலகமே புகழும் மன்னராக இருந்த போதிலும், இந்தியாவில் இவர் நுழைந்த போது, ஒரு சாதுவின் மூலம் மிகப்பெரிய படிப்பினை பெற்றார். சுருக்கமாக சாம்ராஜ்யம் படைத்த அலெக்சாண்டரை, அந்த சாது வென்று விட்டார்.என்றே கூறலாம். தனது வீரர்கள் பலருடன், ஒரு கிராமத்தை கடந்த அலெக்சாண்டர், வழியில் ஒரு சாதுவை சந்தித்தார். அந்த சாது ஒரு மர்த்தின் அடியில் அமர்ந்து தெய்வ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.பார்ப்பதற்கு மெலிந்த தோற்றமும், மிக ஏழ்மையான நிலையில் இருப்பதை போல் காட்சி அளித்தார். அவரது சாந்தமான தோற்றத்தையும், ஏழ்மை நிலையையும் பார்த்த அலெக்சாண்டர் அவர் அருகில் சென்று கேட்டார். ஐயா! தங்களுக்கு எதுவும் தேவைப்படுகிறதா? சாதுவோ, எதுவும் பேசாது அமைதியாக இருந்தார். இதனால் அலெக்சாண்டர் மீண்டும் ஒருமுறை அந்த சாதுவி...