Skip to main content

Posts

Showing posts from May 14, 2021

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

  * ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும் * ******************************** நாத்திகன் ஓருவன் மேடையில் பிரசங்கிக்கிறான். "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாய் ஜால  திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான். அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவன்  மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். "கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன். பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.தின்று முடித்த...